Ambedkar Death Anniversary: டாக்டர் அம்பேத்கர் நினைவுதினம் - குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை!
அம்பேத்கர் நினைவுதினத்தையொட்டி அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இந்திய அரசியலமைப்பை இயற்றியவர்களில் ஒருவரான சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 65ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
भारत रत्न बाबासाहेब डॉ. भीमराव अम्बेडकर को उनके महापरिनिर्वाण दिवस पर सादर श्रद्धांजलि।
— Narendra Modi (@narendramodi) December 6, 2021
Tributes to Dr. Ambedkar Ji on Mahaparinirvan Diwas. pic.twitter.com/e3ieIbG4Me
இந்நிலையில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மேலும் அங்கு அலங்கரித்துவைக்கப்பட்ட உருவ படத்திற்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Delhi | President Ram Nath Kovind, Vice President M Venkaiah Naidu, Prime Minister Narendra Modi, Lok Sabha Speaker Om Birla, LoP Rajya Sabha Mallikarjun Kharge and other parliamentarians paid tribute to Dr. BR Ambedkar on his death anniversary today pic.twitter.com/HBKbuuIj8H
— ANI (@ANI) December 6, 2021
அவர்களைத் தொடர்ந்து, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் அம்பேத்கரின் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
President Ram Nath Kovind paid floral tributes to Babasaheb Dr B.R. Ambedkar on his Mahaparinirvan Diwas at Parliament House Lawns, New Delhi. pic.twitter.com/nywxlYGFNh
— President of India (@rashtrapatibhvn) December 6, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மே