மேலும் அறிய

Air India Plane Escapes Crash: ஜஸ்ட் மிஸ்; 'Cut-off' ஆன எரிபொருள் சுவிட்ச்; பதறிய ஏர் இந்தியா விமானிகள்; பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூருவில், அகமதாபாத் விமான விபத்து போன்றே நிகழ இருந்த ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் கடைசி நிமிடத்தில் Fuel Switch கோளாறு கண்டறியப்பட்டதால் பயணிகள் தப்பியுள்ளனர்.

பெங்களூருவில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில், கடைசி நேரத்தில் எரிபொருள் ஸ்விட்ச் கோளாறு கண்டறியப்பட்டதால், அகமதாபாத்தில் நிகழ்ந்தது போன்ற பெரிய கோர விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இதே ட்ரீம்லைனர் விமானம், இதே பிரச்னையால் விபத்துக்குள்ளான நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பான நிமிடங்கள்

நேற்று மாலை, லண்டனிலிருந்து பெங்ளூரு வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், பெங்களூரு விமான நிலையத்தில் தரைறயிறங்கியுள்ளது. பின்னர், சிறிது நேரம் கழித்து அடுத்த பயணத்திற்காக புறப்படத் தயாராகியுள்ளது.

அப்போது, எதிர்பாராத விதமாக, விமானத்தின் எரிபொருள் சுவிட்ச் தானாகவே 'Run' நிலையிலிருந்து 'Cutoff' நிலைக்கு மாறியுள்ளது. அந்தச் சுவிட்ச் தானாகவே 'Cut-off' நிலைக்குச் சென்றதால், விமானத்தின் எஞ்சினுக்கு எரிபொருள் செல்வது தடைபடும் அபாயம் இருந்தது.

பதறிய விமானி

நல்லவேளையாக, விமானத்தின் எஞ்சினை ஸ்டார்ட் செய்தபோது, விமானி ஒருவர் இந்த கோளாறை கண்டறிந்தவுடன் பதற்றமடைந்து பின்னர் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும், விமானம் முழுமையான ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் உள்ள 2 எரிபொருள் ஸ்விட்சுகளில், இடது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் இரண்டு முறை 'ரன்' நிலையில் இருக்கத் தவறியதாலும், எஞ்சின் ஸ்டார்ட்அப்பின் போது 'கட்ஆஃப்' நிலைக்கு நகர்ந்ததாலும், விமானம் தரையிறக்கப்பட்டதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் விமான விபத்திற்கு காரணமான அதே கோளாறு

கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி அன்று, அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திற்கு அருகே இருந்த விடுதி ஒன்றின் மீது மோதி, வெடித்துச் சிதறியது. அந்த கோர விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.

அந்த விபத்து ஏற்பட்டதற்கும் இந்த எரிபொருள் சுவிட்ச் கோளாறுதான் முக்கிய காரணமாக இருந்தது, விபத்திற்கு பிறகு கருப்புப் பெட்டியின் மூலம் கண்டறியப்பட்டது. அதில், விமானிகள் கடைசி நிமிடத்தில் பேசியது பதிவாகியிருந்தது. விமானம் கிளம்பிய உடன், ஒரு விமானி, எரிபொருள் சுவிட்ச்சை ஏன் ஆஃப் செய்தீர்கள் என்று மற்றொரு விமானியிடம் கேட்பதும், அதற்கு, நான் அப்படி செய்யவில்லை என்று அந்த விமானி கூறுவதும் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், அகமதாபாத் விபத்திற்குப் பிறகு, ஏர் இந்தியா தனது அனைத்து போயிங் 787 விமானங்களையும், போயிங் நிறுவனத்தினரை வைத்தே பரிசோதனை செய்திருந்தது. அவர்களும், அனைத்து விமானங்களின் சுவிட்சுகளையும் பரிசோதனை செய்துவிட்டு, எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்திருந்தனர். ஆனாலும், மீண்டும் அதே கோளாறு மற்றொரு ட்ரீம்லைனர் விமானத்தில் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் புறப்பட இருந்த நேரத்தில், விமானி கோளாறை கண்டுபிடித்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு,  நல்வாய்ப்பாக பணிகள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். அப்படி இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.!

 

Frequently Asked Questions

பெங்களூருவில் இருந்து லண்டன் செல்லவிருந்த விமானத்தில் என்ன பிரச்னை ஏற்பட்டது?

பெங்களூருவில் இருந்து லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில், கடைசி நேரத்தில் எரிபொருள் ஸ்விட்ச் கோளாறு கண்டறியப்பட்டது. இதனால், விமானத்தின் எஞ்சினுக்கு எரிபொருள் செல்வது தடைபடும் அபாயம் ஏற்பட்டது.

இந்த எரிபொருள் ஸ்விட்ச் கோளாறு முன்பு இதே போன்ற விமானத்தில் ஏற்பட்டதா?

ஆம், கடந்த ஆண்டு அகமதாபாத்தில் இதே போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் ஏற்பட்ட கோர விபத்திற்கும் இதே எரிபொருள் ஸ்விட்ச் கோளாறுதான் காரணமாக இருந்தது.

விமானத்தில் கண்டறியப்பட்ட கோளாறை யார் கண்டுபிடித்தார்கள்?

விமானம் புறப்படத் தயாராகும்போது, விமானி ஒருவரால் இந்த கோளாறு கண்டறியப்பட்டது. அவர் உடனடியாக விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அகமதாபாத் விபத்திற்கு பிறகு ஏர் இந்தியா என்ன நடவடிக்கை எடுத்தது?

அகமதாபாத் விபத்திற்குப் பிறகு, ஏர் இந்தியா தனது அனைத்து போயிங் 787 விமானங்களையும் போயிங் நிறுவனத்தினரைக் கொண்டே பரிசோதனை செய்தது. அப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Embed widget