மேலும் அறிய

Chandrababu: சிக்கலில் சந்திரபாபு நாயுடு.. 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்.. ஊழல் தடுப்பு நீதிமன்றம் அதிரடி

சந்திரபாபு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக குடியரசு தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெலுகு தேசம் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஊழல் புகாரில் சிக்கிய ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம்
14 நாள்களுக்கு நீதிமன்ற காவல் விதித்துள்ளது.

ஆந்திராவை உலுக்கிய கைது:

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்து செய்யப்பட்டுள்ளார். இவருடைய ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு துறையின் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறி நேற்று காலை 6 மணியளவில் அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கைதை அடுத்து, ஆந்திரா மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தால் ஆங்காங்கே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன.

சந்திரபாபு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக குடியரசு தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெலுகு தேசம் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனிடிடையே,1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு  நாயுடு மீது ஏசிபி 120(பி), 166, 167, 418, 420, 465, 468, 201, 109, 34 மற்றும் 37 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சந்திரபாபுவிடம் விடிய விடிய விசாரணை:

இதனிடையே, விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டு விடிய விடிய விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து, அதிகாலையில் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி மாநில குற்ற புலனாய்வு துறை தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுக்கு விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல் விதித்துள்ளது.

பவன் கல்யாண் எதிர்ப்பு:

சந்திரபாபு நாயுடுவின் கைதிற்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களை பதிவு செய்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

சந்திரபாபுவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து, சிறப்பு விமானத்தில் விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்திற்கு செல்ல  பவன் கல்யாண் புறப்பட்டார். ஆனால், சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அவர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். தொடர்ந்து, சாலை மார்க்கமாக அவர் விஜயவாடா நோக்கி புறப்பட்டபோது, அனுமஞ்சிபல்லை எனும் பகுதியில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதனை கண்டித்து காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்ற பவன் கல்யாண், பின்னர் சாலையிலேயே படுத்து தூங்கி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். போலீசார் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த அவர், பாதுகாப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். இதனால், ஜனசேனா தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
Breaking News LIVE: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்
Breaking News LIVE: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
Breaking News LIVE: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்
Breaking News LIVE: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
Royal Enfield guerrilla 450: போடு வெடிய! ராயல் என்ஃபீல்டின் கெரில்லா 450 மாடல் பைக் எப்போது வருகிறது?
Royal Enfield guerrilla 450: போடு வெடிய! ராயல் என்ஃபீல்டின் கெரில்லா 450 மாடல் பைக் எப்போது வருகிறது?
Embed widget