மேலும் அறிய

ABP-CVoter Snap Poll: சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆம் ஆத்மி தாக்கத்தை ஏற்படுத்துமா? மக்களின் மனநிலை என்ன?

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு சட்டமன்ற தேர்தல் நடக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக நாட்டின் முக்கியமான 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலின் கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏபிபி – சி வோட்டர் இணைந்து ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இந்த மூன்று மாநில மக்களின் மன நிலையை வெளிப்படுத்தும் விதமாக தற்போது மீண்டும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர்.

இதில், ஆம் ஆத்மி கட்சியால் மத்திய பிரதேச, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் தாக்கம் இருக்குமா? என்ற கேள்வி மக்களிடம் வைக்கப்பட்டது.

சத்தீஸ்கர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஆதரவாளர்களில் 54.1 சதவீதம் பேர் ஆம் ஆத்மியின் வளர்ச்சி பா.ஜ.க.விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர். 38.3 சதவீதம் பேர் இது காங்கிரஸ் கட்சியை பாதிக்கும் என்று கூறியுள்ளனர். 31.6 சதவீதம் பேர் ஆம் ஆத்மியின் வளர்ச்சி மற்றவர்களை பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.

அதேசமயம், பா.ஜ.க. ஆதரவாளர்களில் 30.2 சதவீதம் பேர் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்றும், 17 சதவீதம் பேர் பா.ஜ.க.விற்கும், 19.1 சதவீதம் பேர் மற்றவர்களுக்கு வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேசத்தில் 51.4 சதவீதம் பா.ஜ.க. ஆதரவாளர்கள் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். 30.4 சதவீத பா.ஜ.க. ஆதரவாளர்கள் பா.ஜ.க.விற்கும், 29.2 சதவீதம் பேர் மற்ற கட்சிக்கும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். 23.2 சதவீதம் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கட்சிக்கே வாக்களிப்போம் என்றும், 44.9 சதவீதம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பா.ஜ.க.விற்கும், 32.6 சதவீதம் பேர் மற்றவர்களுக்கும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.

ராஜஸ்தான்:

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் 40.9 சதவீதம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஆம் ஆத்மியின் வளர்ச்சி காங்கிரசை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர். 50 சதவீதம் பேர் இது பா.ஜ.க.வை பாதிக்கும் என்றும், 47.5 சதவீதம் பேர் மற்றவர்களை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேசமயம் , 29.6 சதவீத பா.ஜ.க. ஆதரவாளர்கள் ஆம் ஆத்மியின் வளர்ச்சி காங்கிரசை பாதிக்கும் என்றும், 20 சதவீதம் பேர் இது பா.ஜ.க.வை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 7-ந் தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ந் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23-ந் தேதியும் நடக்கிறது.  தெலங்கானாவில் நவம்பர் 30-ந் தேதியும், சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக வரும் வரும் நவம்பர் 7-ந் தேதியும் மற்றும் நவம்பர் 17-ந் தேதியும் நடக்கிறது. இந்த 5 மாநிலங்களிலும் நடைபெற்ற வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 3-ந் தேதி நடக்கிறது.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget