மேலும் அறிய

Bilkis Bano Case: பாதிக்கப்பட்டவரின் உரிமை முக்கியம்: பில்கிஸ் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின் 5 முக்கிய அம்சங்கள்

2002 குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையைக் காப்பது மிகவும் முக்கியமானது என சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டுள்ளது. 

கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது.  குஜராத் அரசின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி ரத்து செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையைக் காப்பது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளது. 

பில்கிஸ் பானோ வழக்கில் எஸ்சியின் முக்கிய மேற்கோள்கள்

1.தண்டனை என்பது ஒருபோதும் பழிவாங்கலுக்கானது அல்ல, சீர்திருத்தத்திற்கானது. குற்றவாளியை சீர்திருத்துவதற்கான கோட்பாடுதான் தண்டனை. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனையின் நோக்கம் பூர்த்தி அடைந்து அவர் தனது தவறினை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்டால் அவரை விடுவிக்கவேண்டும் என்பதுதான் சீர்திருத்தக் கோட்பாட்டின் இதயம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

2. பாதிக்கப்பட்டவரின் உரிமைகளும் முக்கியமானது. ஒரு பெண் எப்போதும் மரியாதைக்கு தகுதியானவர். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிப்பதை அனுமதிக்க முடியுமா? இவைதான் எழும் பிரச்சினைகள். "ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவை மேற்கோள் காட்டி நீதிபதி கிருஷ்ண ஐயர், குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் இருந்து ஆண்கள் வெளிவரவே இல்லை" என்று நீதிபதி நாகரத்னா கூறியதாக கூறினார். 

3. குற்றம் நடந்த இடம் மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட இடம் ஆகியவை பொருத்தமானவை அல்ல. குற்றவாளியை விசாரித்து தண்டனை விதிக்கப்படும் அரசை உரிய அரசாக நடத்துவதே நாடாளுமன்றத்தின் பண்பாகும். குற்றம் நடக்கும் இடத்தை விட, விசாரணை நடக்கும் இடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

4. குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்ட மாநிலத்தினைச் சேர்ந்த  அரசுதான் மன்னிப்பு வழங்குவதற்கு பொருத்தமான அரசு. குற்றம் நடந்த அரசு குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது.  குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவது குறித்தோ மன்னிப்பு வழங்குவது குறித்தோ முடிவினை எடுக்க குற்றம் நடந்த மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. 

5.  ரிட் மனுவில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உண்மைகளை மறைத்து குற்றவாளியால் தாக்கல் செய்யப்பட்டு, அவர் தவறான அறிக்கைகளை வெளியிட்டிருந்தார். மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பு குறித்து குஜராத் அரசு எதுவுமே கருத்து தெரிவிக்கவில்லை . ஆனால் குற்றவாளிகளின் ரிட் மனு சாட்சியங்களை நசுக்கியது, மேலும் வழக்கினை தவறாக வழிநடத்தும் நோக்கில் பொய்யான உண்மைகளை உருவாக்கியது உள்ளிட்ட குற்றவாளிகளின் நடவடிக்கையை குஜராத் மாநில அரசு பரிசீலிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியது.  அதேபோல் " குஜராத் மாநில அரசு மே 13, 2022இல் வழங்கிய தீர்ப்பு தவறானது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: அடித்து ஆடும் அக்ஸர் படேல்..வெற்றி இலக்கை எட்டுமா டெல்லி கேப்பிடல்ஸ்?
RCB vs DC LIVE Score: அடித்து ஆடும் அக்ஸர் படேல்..வெற்றி இலக்கை எட்டுமா டெல்லி கேப்பிடல்ஸ்?
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: அடித்து ஆடும் அக்ஸர் படேல்..வெற்றி இலக்கை எட்டுமா டெல்லி கேப்பிடல்ஸ்?
RCB vs DC LIVE Score: அடித்து ஆடும் அக்ஸர் படேல்..வெற்றி இலக்கை எட்டுமா டெல்லி கேப்பிடல்ஸ்?
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget