Watch Video: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ரயில்.. பனாரஸில் நடந்த ஏ எப்புட்றா? சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!
உத்தரபிரதேச மாநிலத்தில் பனாரஸில், ரயில் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வினோதமான சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பனாரஸில், ரயில் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வினோதமான சம்பவம் நடந்துள்ளது.
India is not for the beginners 🤣😂 pic.twitter.com/sSFLZWS3BK
— BALA (@erbmjha) August 13, 2023
நெரிசலில் சிக்கிய ரயில்:
உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங்கில், ரயில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரயில்வே கிராசிங்கில் போக்குவரத்து நெரிசல் காரணமாக எந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. உத்தரபிரதேசத்தின் பனாரஸில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை நிர்வகிக்க முடியாமல் திணறுவதை வைரல் கிளிப் காட்டுகிறது.
Have you ever seen a train stuck in traffic? 🤷🏻♂️🤦🏻♂️😂 pic.twitter.com/q1YkD1YRCm
— Saket Badola IFS (@Saket_Badola) August 13, 2023
இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ட்விட்டர் தளத்தை பகிர்ந்துக்கொண்டனர். அதில் ஒரு பதிவில், "டிராஃபிக்கில் சிக்கிய ரயில்களை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?" என குறிப்பிடப்பட்டிருந்தது.
In Uttar Pradesh, Train has struck on traffic😂
— Ajeet (@ajeetweets) August 13, 2023
it happens only in India 😅pic.twitter.com/j7lAdcyY2F
மற்றொரு பதிவில் "இது இந்தியாவில் மட்டுமே நடக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இது போல் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு அந்த வைரல் வீடியோ க்ளிப்பை பகிர்ந்து வருகின்றனர்.
அதிகரிக்கும் ரயில் விபத்துகள்:
இது ஒருபக்கம் இருக்க, ரயில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், பாகிஸ்தானில் ராவல்பிண்டி செல்லும் ஹசாரா விரைவு ரயில் தடம் புரண்டதில், 10 பெட்டிகள் கவிழ்ந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சுமார் 80 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். சஹாரா ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த பகுதி பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் இருந்து 275 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ரயில் கராச்சியில் இருந்து பாகிஸ்தானின் பஞ்சாப் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இது ஒரு பயங்கரவாதச் செயலாக இருக்கக் கூடும் என்பதை அந்நாட்டின் மத்திய ரயில்வே அமைச்சர் நிராகரிக்கவில்லை. இதுதொடர்பாக பேசிய ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் கவாஜா சாத் ரபீக், ”சம்பவம் குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். மீட்பு பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”பிரேக்குகளை தாமதமாகப் பயன்படுத்தியதால் விபத்தின் தீவிரம் கடுமையாக இருந்தது. ரயிலில் 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சில மணிநேரங்களில் இயந்திரங்களை பயன்படுத்தி தடம் புரண்ட பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ரயில் சேவை சீரமைக்கப்பட்டது” என தெரிவித்தார்.