மேலும் அறிய

Zika Virus: மும்பையில் பரவும் ஜிகா வைரஸ்.. 15 வயது சிறுமிக்கு தொற்று பாதிப்பு உறுதி..

மும்பையில் 15 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் ஜிகா வைரஸால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மும்பையில் உள்ள புறநகர் குர்லாவைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மும்பை நகராட்சி தெரிவித்துள்ளது. இந்த சிறுமிக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி இருப்பதாக கூறி ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதம் 23 ஆம் தேதி 79 வயது முதியவர் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதாக கூறி அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. 2021 ஆம் ஆண்டில், கேரளாவைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே ஆண்டில், மகாராஷ்டிராவின் பெல்சார் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டில், தலசரியில் உள்ள ஒரு அரசு குடியிருப்புப் பள்ளியில் படித்த 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. ஜிகா வைரஸ் என்பது கொசுக்களால் பரவும் நோயாகும், இந்த நோயின் தாக்கம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைக்கு அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ், டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதற்கு காரணமான ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது. 

ஜிகா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் பெரும்பாலும் லேசானவை. ஆனால் ஒரு சிலருக்கு காய்ச்சல், அழற்சி, மூட்டு வலி மற்றும் கான்ஜுன்க்டிவிடிஸ் (சிவப்பு கண்கள்) ஆகியவை தென்படலாம். பல பாதிக்கப்பட்ட நபர்கள் தாங்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை உணராமல் இருக்கலாம், ஏனெனில் அறிகுறிகள் மற்ற பொதுவான நோய்களுக்கு ஏற்படுவது போலவே இருக்கும். இருப்பினும், பிறந்த குழந்தைகளில், குறிப்பாக மைக்ரோசெபாலி என்ற (சிறிய தலை) பிறப்பு குறைபாடுக்கு வைரஸின் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Modi Indonesia Visit: பாரத் சர்ச்சைக்கு மத்தியில் இந்தோனேசியாவுக்கு பறக்கும் மோடி! ஆசியான் மாநாட்டில் திட்டம் என்ன?

Tirupati: திருப்பதியில் இலவச விஐபி தரிசனம் வேண்டுமா?.. அப்ப இதை செய்யுங்க.. ஆஃபர் கொடுக்கும் தேவஸ்தானம்..!

Parliament Special Session: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்பது உறுதி: காரணத்தை சொன்ன காங்கிரஸ்!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget