மேலும் அறிய
Advertisement
9 PM Headlines: ஒரு நிமிடத்தில் ஒரு நாளை படிங்க.. இன்றைய முக்கியச் செய்திகள் இதோ..
Headlines 9 PM: இன்று காலை முதல் இரவு 9 மணிவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- நாட்டுப்புறக் கலைகளுக்கு மாபெரும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடத்தும் நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் ஏ.வ.வேலு மதுரையில் நேற்று நடைபெற்ற கிராம உதவியாளர் பணிக்கான ஆங்கில திறனறி தேர்வு விடைத்தாள் வெளியான விவகாரம் - வட்டாட்சியர் பணியிடமாற்றம் செய்து மதுரை ஆட்சியர் உத்தரவு
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி 144 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டது.
- விழுப்புரம்: மரக்காணம் பறவைகள் சரணாலயம் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார்.
- பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது.
- புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 8ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 8,9ல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் என அறிவித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு; உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சீராய்வு மனு
இந்தியா:
- குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கப்போவதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
- கோக்கைன் போதைப்பொருள் இந்தியாவிற்குள் வரத்தொடங்கியுள்ளது - அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை
- குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் சபர்மதி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வரிசையில் நின்று வாக்களித்தார்.
- பிரதமர் மோடி தலைமையிலான ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு, சிறுநீர் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
- குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2ம் கட்ட தேர்தலில் 67% வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பிரதமர் மோடியின் கொள்களைகளால் இந்தியா பிளவுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பு - காங்கிரஸ்
உலகம்:
- இந்தோனேசியாவில் எரிமை வெடிப்பு : 2 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு
- அமேசான் நிறுவனம் மிகப்பெரிய அளவில் பணிநீக்க நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- ஹெட்ஃபோன், இசை நிகழ்ச்சிகளால் உலகில் 1 பில்லியன் இளைஞர்களுக்கு செவித்திறன் பாதிக்கும் அபாயம் இருப்பதாக தகவல்
- மியான்மரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை
விளையாட்டு:
- வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அண்டர் 19 மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- அர்ஜுனா விருதை எனது தாத்தா-பாட்டிக்கு சமர்ப்பிக்கிறேன் என்று துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் தெரிவித்தார்.
- இந்தியாவின் தோல்விக்கு ராகுல் மட்டுமே காரணம் கிடையாது - சுனில் கவாஸ்கர் கருத்து
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion