மேலும் அறிய

7 PM Headlines: சுடச்சுட காஃபியுடன் மாலை 7 மணி செய்திகள்..! இதுவரை இன்று நடந்தது என்ன..?

7 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • நெய்வேலி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை கையகப்படுத்தவுள்ள என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 நாள்கள் நடைபயணம்.
  • கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே மோதல். பாஜக நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
  • தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு. சென்னை புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.
  • சென்னை, அடையாறு பூங்காவில்  நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்த பூங்கா ஊழியர்கள், பொதுமக்களுக்கு திமுக கட்சி நிதியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கினார். 
  • புதுக்கோட்டை தீண்டாமை விவகாரம் - இன்று நடக்கவிருந்த சமூக பிரதிநிதிகள் உடனான சமாதானக் கூட்டம் ரத்து.
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி (HRA) தொடர்பான விதிகளை நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை (DoE) புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி, சில அரசு ஊழியர்களுக்கு சில காரணங்களால் HRA க்கு தகுதி கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்க காசுகள் வழங்குவதாகவும், சாதி பெயர்களை தவிர்த்து மாடுகளை அவிழ்ப்பதாகவும் அமைச்சர் பி.மூர்த்தி உறுதி அளித்தார்.
  • மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள்  நிவாரணதொகை வழங்கும் பணியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
  • கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வரும் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இந்தியா:

  • கேரளா, வயநாடு பகுதியில் சுற்றித்திரியும் பிஎம்2 மக்னா யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

  • சரிந்துகொண்டேயிருக்கும் ஜோஷிமத் நகரத்தில் உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

  • அனுமதியின்றி இறைச்சி வியாபாரம் செய்ததாக உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் யாகூப் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.

  • ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற நபர் டெல்லி காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டார்.

உலகம்:

  • சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவால் அனுப்பப்பட்ட மிகப் பழமையான 38 வயது செயற்கைக்கோள் இந்த வாரம் முதல் விண்ணிலிருந்து மண்ணை நோக்கி விழலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு:

  • ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. 

  • பத்தாவது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு. இதில் இலக்கியதாசன், சிவசுப்பிரமணியன், ஜெஸ்வின், அல்ட்ரின், பிரவீன் சித்திரவேல், ரோசி மீனா பால்ராஜ், பவித்ரா வெங்கடேஷ் ஆகிய 6 தமிழ்நாடு வீரர் - வீராங்கனைகள் இடம்பிடித்தனர்.

  • இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக சேத்தன் ஷர்மா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
"பெங்களூரு டிராபிக்.. கடவுளே வந்தாலும் பிரச்னையை தீர்க்க முடியாது" டி.கே. சிவகுமார் தடாலடி!
Embed widget