மேலும் அறிய

7 PM Headlines: 7 மணி தலைப்புச்செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நிகழ்ந்தது என்ன..?

7 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • ஜனவரி 9ஆம் தேதி 2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 
  • கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை  உத்தரவிட்டுள்ளது. 

  • மகளிர் உயர, மாநிலம் உயரும்’ என்ற தி.மு.க.வின் பரப்புரை ஹாஷ்டாக்கான “தலைநிமிர்ந்த தமிழகம்” ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட். 
  • பொங்கல் பரிசு தொகுப்பை பெற நாளை முதல் டோக்கன் விநியோகம் - தமிழக அரசு தகவல்
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வமுரளி என்பவரை கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை நேரில் அழைத்து அவரது திறமையை பாராட்டியுள்ளார்.

  • திருவொற்றியூர் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 வாலிபர்களில் 3 பேரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. 
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வு எதிரொலி: தென் மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
  • கட்சியை வலுப்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை தமிழ்நாடு வருகை தருகிறார்.
  • சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளுக்கு 100 சதவீத ஆர்டிபிசிஆர் சோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, நாளை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. 

இந்தியா:

  • உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

  • மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

  • கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்று எச்சரிக்கையாக இருந்தால் பண்டிகை கொண்டாட்டத்துக்கு தடை வராது - பிரதமர் மோடி அறிவிப்பு
  • ஆந்திராவில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 14,000 கிலோ கஞ்சாவை போலீசார் எரித்தனர்.
  • சீனாவில் நிலவும் தீவிரமான கொரோனா நிலை போல இந்தியாவில் ஏற்படாது என மூத்த விஞ்ஞானியும் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குநருமான வினய் கே நந்திகூரி தெரிவித்துள்ளார்.
  • தங்களது மகள்களையும், தங்கைகளையும் குடிப்பழக்கம் கொண்டவர்களுக்கு, திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என மத்திய இணையமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
  • இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்தால் அதை கையாளும் வகையில் தயார் நிலையில் உள்ளோமா என்பதை உறுதி செய்ய சுகாதார மையங்களில் பயிற்சி சோதனை நடத்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
  • சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

உலகம்:

  • அமெரிக்காவில் நிலவி வரும் மோசமான பனிப்புயலால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 40 லட்சம் பேர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். 
  • நேபாளத்தின் நாட்டின் புதிய பிரதமராக பிரசாந்தா மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார்.
  • நிலையான, உறுதியான வளர்ச்சிக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் - சீனா அமைச்சர் அறிவிப்பு
  • சீனாவில் ஜெஜியாங் நகரத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவதாக இ-மெயிலை கண்டுபிடித்த தமிழரான சிவா அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

விளையாட்டு:

  • டெஸ்ட் போட்டியின் வெற்றியின் மூலம், இந்தியா மதிப்புமிக்க ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
  • இலங்கை அணிக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் ரோகித்திற்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Idly Kadai: பாங்காக்கில் இட்லி கடை போடும் தனுஷ்! இந்த வாரமே கிளம்புறாரு - ரசிகர்களே
Idly Kadai: பாங்காக்கில் இட்லி கடை போடும் தனுஷ்! இந்த வாரமே கிளம்புறாரு - ரசிகர்களே
Watch Video :
Watch Video : "அடியா இல்ல இடியா.." கூரைக்கு பறந்த பந்து.. வாயடைத்து நின்ற ஹாரிஸ் ராஃப்
ஐயப்ப பக்தர்களுக்காக திறக்கப்பட்ட சத்திரம், புல்லுமேடு பாதைகள்... எந்தெந்த நேரங்களில் செல்லலாம்..!
ஐயப்ப பக்தர்களுக்காக திறக்கப்பட்ட சத்திரம், புல்லுமேடு பாதைகள்... எந்தெந்த நேரங்களில் செல்லலாம்..!
கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
Embed widget