மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்றைய நிகழ்வுகள்.. இன்றைய தகவல்களாக.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு
- வெள்ளநீர் வடியாததால் சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - காஞ்சிபுரம், செங்கல்பட்டில் சில தாலுக்காக்களுக்கு விடுமுறை
- வெள்ளம் பாதித்த பகுதிகளில் 37 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- சென்னையில் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் நிலைமை சீரானதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
- சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 3வது நாளாக முழு வீச்சில் நடைபெற்ற மீட்பு பணி - பல இடங்களில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியது
- தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்ப உள்ளதாக தகவல்
- சென்னையில் கார் பந்தயம் நடத்த அரசு அவசரம் காட்டுவது கண்டிக்கத்தக்கது - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்
- முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
- இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
- டிசம்பர் 11 ஆம் தேதி முதல் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு
- சென்னையில் ரூ.4 ஆயிரம் கோடியில் நடைபெற்ற வெள்ள வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
- தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியா:
- மிக்ஜாம் புயலால் சென்னையில் வெள்ள பாதிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடின்
- மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
- மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை சரிசெய்ய தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு
- புயல் வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள தமிழ்நாட்டிற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
- தெலங்கானாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி- சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பு
- நாடாளுமன்றத்தில் நடந்த பாஜக உறுப்பினர்கள் கூட்டம் - 3 மாநில தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு
- கர்நாடகாவில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
- உத்தரகாண்டில் இன்றும், நாளையும் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - பிரதமர் மோடி டேராடூன் செல்கிறார்
- சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற 3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா - 4 அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு
உலகம்:
- வெனிசுலா அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
- ஜப்பானில் ஆளும் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து தலைவர் புமியோ கிஷிடா விலக உள்ளதாக தகவல்
- மெக்ஸிகோவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் - கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி
- காஸா மீது நடைபெறும் தாக்குதலை காட்டிலும் மக்கள் பாதிப்பு முக்கியமானது - இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்
விளையாட்டு:
- புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையேயான போட்டி டிரா
- ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னை - ஜாம்ஷெட்பூர் இடையேயான ஆட்டம் டிரா
- 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி
- புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் குஜராத் அணியை வீழ்த்தி அபார வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion