மேலும் அறிய
7 AM Headlines: 4 மாநில தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டில் புயல் எச்சரிக்கை! இன்றைய தலைப்பு செய்திகள் இதோ!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- நீட் விலக்கு வலியுறுத்தி கையெழுத்தி இயக்கம் இதுவரை 55 லட்சத்தை தாண்டியது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
- வங்கக் கடலில் புயல் சின்னம் எதிரொலி: பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன? தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம்
- நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு துணை நிற்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
- சிறார் குற்றங்களை தடுப்பது குறித்து அனைத்து துறைகளும் இணைந்து விவாதிக்க வேண்டியது அவசியம் - டிஜிபி சங்கர் ஜிவால் வலியுறுத்தல்
- மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
- மயிலாடுதுறையில் ஜனவரி 8ம் தேதி முதல் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவுறுத்தியுள்ளனர்.
- பொதுமக்கள் யாரும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்ல வேண்டாம் என அமைச்சர் கே. என். நேரு அறிவுறுத்தியுள்ளார்.
- எனக்கு 3 மாதங்களாக அமலாக்கத்துறையின் இடைத்தரகர்களின் மூலம் மிரட்டல் வந்தது என்று சபாநாயர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
- மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி பாஜக தலைவர் அண்னணாமலை தான் - சிவி சண்முகம்
இந்தியா:
- சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்: இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.
- நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்; ஆளுநர்கள் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் - அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி வலியுறுத்தல்
- ஆம் ஆத்மியை சேர்ந்த சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத்துறை 60 பக்க பரபரப்பு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
- திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன்கள் 22ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பெங்களூருவில் கையும், களவுமாக சிக்கிய கும்பல் கடந்த 6 ஆண்டுகளில் 250 பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
- பிரதமர் மோடி துபாயில் இத்தாலி பிரதமருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை, தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
- சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு இருப்பதாக ஆதித்யா எல்.1 விண்கலம் கண்டறிந்துள்ளது.
உலகம்:
- காஸாவில் இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு: 240பேர் கொன்று குவிக்கப்பட்டதாக தகவல்
- பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு
- தென் கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள்; பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
- பெண்கள் ஒவ்வொருவரும் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் - ரஷ்ய அதிபர் புதின் வேண்டுகோள்
விளையாட்டு:
- தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் சென்ற இளைஞர் ஒருவருக்கு விராட் கோலியின் உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மாவிடம் பிசிசிஐ கேள்வி எழுப்பியுள்ளது.
- டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து அணியை வங்கதேசம் முதல் முறையாக வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளது.
- இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி வென்றுள்ளார்.
- இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion