மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நாட்டு நடப்புகள்.. உங்களை சுற்றி நடந்த முக்கிய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு அரசின் தீபாவளி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - நவம்பர் 9 முதல் 11 ஆம் தேதி வரையும், 13 முதல் 15 ஆம் தேதி வரையும் மொத்தம் 17 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்
- பசும்பொன்னில் விமரிசையாக தொடங்கியது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை - திரண்ட பொதுமக்கள்
- 2024 ஆம் ஆண்டு அடிமைகளையும், எஜமானர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பொதுமக்கள் வசதிக்காக 2 மண்டபங்கள் கட்டித் தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- மதுரையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகை - 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை
- பொள்ளாச்சி மற்றும் சத்தியமங்கலத்தில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடல் மைதானத்தில் பட்டாசு விற்பனை இன்று தொடக்கம்
- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் அறிவிப்பு - அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
- வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம் - டிவிஎஸ் குழும நிறுவனர் டி.எஸ். சீனிவாசனின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டி சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பால் பரபரப்பு
- டெங்கு உட்பட மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் இன்று இலவச மருத்துவ முமாம் நடைபெறுகிறது
இந்தியா
- டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
- 2023 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரணம் தெரிந்தது - இந்தியா முழுவதும் பார்த்து ரசித்த மக்கள்
- சந்திர கிரகணத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் கோயில் நடைகள் அடைப்பு - இன்று அதிகாலை முதல் வழக்கமான சேவைகள் தொடரும் என அறிவிப்பு
- பிரதமர் மோடி பெரும்பான்மையான வெற்றியோடு 3வது முறையாக பிரதமராக வருவார் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை
- மின்னஞ்சல் மூலம் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு
- இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான ஐநா சபை வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது - அரசியல் கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம்
உலகம்
- அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து குடியரசு கட்சியைச் சேர்ந்த மைக் பென்ஸ் விலகல்
- சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை
- எகிப்தில் அடுத்தடுத்து கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் பலி
- காசாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச உதவி குழுக்களுக்கு இணையதள சேவை வழங்க எலான் மஸ்க் முடிவு
விளையாட்டு
- உலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதல்
- உலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோல்வி
- உலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோல்வி
- பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் 100 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா சாதனை - பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion