மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: அரசியல் முதல் விளையாட்டு வரையிலான முக்கிய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்பு செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சென்னை கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு
- ரவுடி கருக்கா ரவி பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் ஆளுநர் மாளிகை முன்வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழக காவல்துறை மறுப்பு - சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு விளக்கம்
- விமரிசையாக நடைபெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
- நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்
- ஆளுநர் பதவியே வேஸ்ட், அவர் பொய் சொல்வதாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
- தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல்
- தமிழ்நாட்டில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- பசும்பொன்னில் இன்று தொடங்குகிறது தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா - பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு
- வேங்கை வயல் தொடர்பான விசாரணையை முடிக்க சிபிசிஐடிக்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவு
- மதுரையில் இந்தியா, இஸ்ரேல் கொடி அச்சடிப்பட்ட பேனர் ஒட்டிய விவகாரம் - பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது
- சந்திர கிரகணத்தையொட்டி இன்று இரவு சில மணி நேரம் கோயில்களின் நடை அடைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு
இந்தியா
- வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் அரசு இஸ்லாமியர்களையும், தலித் மக்களையும் பயன்படுத்துவதாக தெலங்கானா முதலமைச்சர் சந்தரசேகர ராவ் குற்றச்சாட்டு
- தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் முகமது அசாரூதின் அறிவிப்பு
- மேற்கு வங்கத்தில் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜோதி பிரியா மாலிக் கைது
- நன்னடத்தை விதிகளை மீறியதாக புகார் - அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
- சிறையில் இருக்கும் எனக்கும், வெளியில் இருக்கும் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது என தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நீதிபதிக்கு கடிதம்
- சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 8 மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிப்பு
உலகம்
- காசாவில் இரவோடு இரவாக வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் - உயிரை காத்துக்கொள்ள முடியாமல் மக்கள் தவிப்பு
- மெக்ஸிகோவை சூறையாடிய ஓடிஸ் புயலால் 27 பேர் உயிரிழப்பு
- அரசு ஆவணங்களை வெளிப்படுத்திய வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்க இஸ்லாமாபாத் நீதிமன்றம் மறுப்பு
- ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு
- சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் காலமானார்
விளையாட்டு
- உலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து, நெதர்லாந்து - வங்கதேசம் அணிகள் மோதல்
- உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
- பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் தாய்லாந்தை வீழ்த்தியது இந்தியா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
சென்னை
இந்தியா
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion