மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
- கடல்சார் பல்கலை., பட்டமளிப்பு விழாவுக்காக சென்னை வந்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு - விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்
- சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்றுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு
- ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
- ஒற்றுமையாக இருந்த நாடு இன்று பிரிவினையால் தவிப்பதாக ”என் மண் என் தேசம்” நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கவலை
- நடிகை பாபிலோனாவில் தம்பி மர்மமான முறையில் மரணம் - போலீசார் தீவிர விசாரணை
- மருது சகோதர்கள் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகியவை காரணமாக மதுரையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் - விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் அப்பாவு உறுதி
- ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - தமிழ்நாடு அரசை குற்றம்சாட்டி அறிக்கை வெளியானதால் பரபரப்பு
- ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாடு அரசுக்கு தொடர்பில்லை - அமைச்சர் ரகுபதி பதிலடி
- சந்திர கிரகணத்தையொட்டி நாளை இரவு சில மணி நேரம் கோயில்களின் நடை அடைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு
இந்தியா
- தெலங்கானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனை - ரூ.347 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்
- பயணிகள் தொடர் புகார்களை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகளுடன் மத்திய அரசு நவம்பர் மாதம் பேச்சுவார்த்தை
- தேர்தல் ஆணைய விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நியமனம்
- பாஜகவின் மகளிர் இட ஒதுக்கீடு வெறும் வெற்று வாக்குறுதி தான் என பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்
- மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவால் 28 லட்சம் பெண்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு - அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்
- கர்நாடகாவில் நடைபெற்ற சாலை விபத்தில் பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு
- அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் குறித்த வீடியோ வெளியீடு
உலகம்
- மீண்டும் விசா சேவையை தொடங்கிய இந்தியாவின் முடிவுக்கு கனடா அரசு வரவேற்பு
- பிலிப்பைன்ஸில் கனமழையால் நிலச்சரிவு - கர்ப்பிணி பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு
- மங்கோலியாவில் வீடு தீப்பிடித்து எரிந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி பலி
- இங்கிலாந்து விரைவில் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மையம் தொடங்கப்படும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு
- அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழப்பு
விளையாட்டு
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி
- டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் துபாயில் ஐபிஎல் ஏலம் நடக்கவுள்ளதாக தகவல்
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதல்
- பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் பெங்களூருவில் இன்று தொடக்கம்
- பாரா ஆசிய விளையாட்டு போட்டி - 4வது நாள் முடிவில் இந்தியா 82 பதக்கங்கள் குவித்து சாதனை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion