மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உலகம் முதல் உள்ளூர் செய்திகள் வரை உங்களை சுற்றி.. தொகுத்து தருகிறோம் தலைப்பு செய்திகளாய்..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்; உச்ச நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை தாக்கல்
- த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான்
- தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- நான் லஞ்சம் வாங்குனேனா? முடிஞ்சா நிரூபிச்சு காட்டுங்க - அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை சவால்
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த பி. சங்கர் ஐஏஎஸ், விவசாயம் - விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
- தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலுக்கு மருந்து இல்லையா? ஈபிஎஸ்ஸை நேரில் அழைத்து வாருங்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை ராயபுரத்தில் 27 பேரை வெறிநாய் கடித்த சம்பவத்தில் நாய்க்கு ரேபிஸ் நோய் இருந்ததால் அனைவரும் 5 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
- இதுவரை ரூ.5500 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில் தான் மீட்கப்பட்டு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியா:
- செய்தித்தாள்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் அதானி குழுமத்துக்கு எதிரான புகாரில் செபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடல்
- ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
- ஜம்மு காஷ்மீர் பிர் பஞ்சள் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
- உத்தரகாண்ட் மாநிலத்தில் சில்க்யாரா விபத்திற்குப் பிறகு, உள்ளே சிக்கியவர்களை மீட்பதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
- பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது பண மோசடி புகார் எழுந்ததையடுத்து, சட்டப்பிரிவு 420ன் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சபரிமலை சீசன் தொடங்கி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்:
- ஹமாஸ் விடுவித்த 13 பணய கைதிகளுக்கு ஈடாக 24 பெண்கள் உள்பட 39 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
- போர்நிறுத்தம் முடிவிக்கி வந்த பிறகு பல சுரங்கப்பாதைகள் இடிக்கப்படும் - இஸ்ரேல் தகவல்
- இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
- நெதர்லாந்து தேர்தல் பிவிவி கட்சி தலைவர் கீரித் வில்டர்ஸ் அதிக இடங்களை பிடித்து வெற்றிபெற்றார்.
- அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகளுக்குப் பின்னால் புதிய வைரஸ் இல்லை - சீனா உறுதி
விளையாட்டு:
- பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில், கடைசி பந்தில் ரிங்கு சிங் சிக்ஸர் அடித்தார். ஆனால், இந்த சிக்ஸர் கணக்கில் கொள்ளப்படாது என்று ஐசிசி கூறியுள்ளது.
- மக்கள் தன்னை துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர் என்று அழைப்பதாக இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் வேதனை தெரிவித்துள்ளார்.
- இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, ஸ்வாதி அஸ்தனா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion