மேலும் அறிய

7 AM Headlines: சாந்தன் இலங்கை செல்ல அனுமதி! ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் - இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்; தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் - ஐடி உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் சென்ற கார் விபத்தில் சிக்கியது; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
  • அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமம் சஸ்பெண்ட்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
  • புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும் - திமுக ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • அடுத்த 3 நாட்களில் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
  • தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவை உண்மைக்கு அப்பாற்பட்ட குழு என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் - அண்ணாமலை காட்டம்
  • ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது.
  • இன்றைக்கு திமுக ஆட்சி வந்த பிறகு தமிழ்நாடு எல்லா வகையிலும் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது - கனிமொழி எம்.பி

இந்தியா:

  • குஜராத் மாநிலம் நாடியாட் பகுதியில் 25 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தெலங்கானா மாநிலம் செகந்திரபாத் கண்டோன்மெண்ட் எம்.எல்.ஏ கார் விபத்தில் உயிரிழப்பு
  • தெலங்கானாவில் மானிய விலையில் எரிவாயு வழங்கும் திட்டம் பிப்ரவரி 27ம் தேதி தொடக்கம் - காங்கிரஸ் அறிவிப்பு
  • கர்நாடகாவிற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் - கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்.
  • பிரதமர் நரேந்திர மோடி நன்கொடை வியாபாரம் செய்கிறார் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
  • ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நீதி யாத்திரையில் பிரியங்கா காந்தி இன்று பங்கேற்கிறார்.
  • இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக அழுத்தம் தருவதாக ஆம் ஆத்மி புகார்.
  • வாச்சாத்தி குற்றவாளிகளின் மேல்முறையீட்டு வழக்கை 6 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

உலகம்: 

  • ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் - எலான் மஸ்க்.
  • நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம் சூரியச் சிதறல்களை படம் பிடித்து வெளியிட்டுள்ளது.
  • மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள மால்டா நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.
  • பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏமனில் ஹவுத்தி ஆதரவாளர்கள் போராட்டம்.
  • சீனாவில் முதல் முறையாக AI தொழில்நுட்பத்தால் அனிமேஷன் தொடரின் வீடியோ வெளியாகியுள்ளது.
  • காசா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாக செயல்படும் என்று பிரதமர் நேதன்யா அறிவிப்பு

விளையாட்டு: 

  • மகளிர் பிரீமியல் லீக் தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
  • இங்கிலாந்து அணிக்கு எதிராக தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் ஆகாஷ் தீப்.
  • இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் சேர்த்துள்ளது.
  • ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ரஞ்சி கோப்பையை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் 1 கோடி ரூபாய் பரிசும், BMW காரும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget