Crime : 500 ஆணுறைகள்.. 400 மதுபாட்டில்கள்.. பண்ணை வீடு.. பாலியல் தொழில்...சிக்கிய பாஜக துணைத் தலைவர்..
மேகாலயா மாநிலம் துராவில் சனிக்கிழமையன்று அம்மாநில பாஜக துணைத் தலைவர் நடத்தியதாகக் கூறப்படும் பாலியல் தொழில் விடுதியில் இருந்து ஆறு குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
மேகாலயா மாநிலம் துராவில் சனிக்கிழமையன்று அம்மாநில பாஜக துணைத் தலைவர் நடத்தியதாகக் கூறப்படும் பாலியல் தொழில் விடுதியில் இருந்து ஆறு குழந்தைகள் மீட்கப்பட்டனர். 73 பேர் கைது செய்யப்பட்டனர். இதை மூத்த காவல்துறை அலுவலர் உறுதி செய்துள்ளார்.
ரகசிய தகவலின் கிடைத்ததையடுத்து காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். தீவிரவாதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பெர்னார்ட் என் மராக் என்பவருக்குச் சொந்தமான ரிம்பு பாகன் என்ற பண்ணை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது என்று மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த் சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பெர்னார்ட் என் மராக் மற்றும் அவரது கூட்டாளிகள் நடத்தும் பாலியல் தொழில் விடுதியில் சுகாதாரமற்ற அறைகளுக்குள் பூட்டப்பட்டிருந்த ஆறு சிறார்களை - நான்கு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகளை நாங்கள் மீட்டுள்ளோம். பாதுகாப்பை கருதி, அனைத்து குழந்தைகளும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டப்படி மேலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
சோதனையின்போது, 27 வாகனங்கள், எட்டு இருசக்கர வாகனங்கள், சுமார் 400 மதுபாட்டில்கள், 500க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்படாத ஆணுறைகள், வில் மற்றும் அம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த் சிங், "கைப்பற்றப்பட்ட பொருட்களிலிருந்து அவர்கள் குற்ற செயல்களிலிருந்து ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்கள், 73 பேர் கைது செய்யப்பட்டனர். பண்ணை வீட்டில் 30 சிறிய அறைகள் இருக்கிறது. அவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக பிப்ரவரி மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிறிமி ஒருவரின் உறவினர் மூலம் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, ஒரே வாரத்தில் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்பது உறுதிசெய்யப்பட்டு, இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 366A (மைனர் பெண்ணைக் கடத்தியது), 376 (பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் தன்னையும் தனது தோழியையும் பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அங்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
துரா நகரில் வசிப்பவர்களிடமிருந்து பல வாய்மொழி புகார்கள் பெறப்பட்டன. பண்ணை வீட்டில் ஒழுக்கக்கேடான செயல்கள் நடப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து நடவடிக்கை திட்டமிடப்பட்டது. இந்த சோதனையின் போது, ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆடையின்றி குடித்துக்கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் 68 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பண்ணை வீட்டின் மேலாளர், பராமரிப்பாளர் மற்றும் மூன்று ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர். கடத்தல் (தடுப்பு) சட்டம், 1956 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும், ஷில்லாங் சதார் காவல் நிலையத்தில் உடனடியாக சரணடையுமாறும் அவர்கள் மரக்கிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார்" என்றார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள காரோ பழங்குடியின தன்னாட்சி மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான மராக், பாலியல் விடுதி நடத்துவது தொடர்பான அனைத்து குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார். பண்ணை வீட்டில் நடந்த சோதனைக்காக முதலமைச்சர் கான்ராட் சங்மாவைத் தாக்கியுள்ளார்.
சங்மாவின் என்பிபி தலைமையிலான ஆளும் மேகாலயா ஜனநாயகக் கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது குறிப்பிடத்தக்கது.