ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து - 5 வீரர்கள் உயிரிழப்பு!
பூஞ்ச் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் அருகே பூஞ்ச் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பூஞ்ச் எல்லைப்பகுதியில் (Line of Control (LoC) எதிர்பாராவிதமான ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐந்து வீரர்கள் உயிரிழந்துவிட்டதாகவும் ஐந்து வீரர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
All ranks of #WhiteKnightCorps extend their deepest condolences on the tragic loss of five brave soldiers in a vehicle accident during operational duty in the #Poonch sector.
— White Knight Corps (@Whiteknight_IA) December 24, 2024
Rescue operations are ongoing, and the injured personnel are receiving medical care.@adgpi…
Nilam தலைமை அலுவலகத்தில் இருந்து Balnoi Ghora Post சென்று கொண்டிருந்த 11 மராத்தா லைட் காலாட் படையின் ராணுவ வாகனம், சாலையை விட்டு விலகியபோது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வாகனம் சுமார் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஓட்டுநர் உட்பட 10 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வாகனத்தில் 16 வீரர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இராணுவம் ஈடுப்பட்டுள்ளது.