மேலும் அறிய

வங்கிகள் 3 நாள் வேலைநிறுத்தம்: பணப் பரிவர்த்தனைக்கு மாற்று வழிகள்!

வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 90% வங்கி ஊழியர்களை உள்ளடக்கிய ஐக்கிய வங்கி யூனியன்களின் கூட்டமைப்பு இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது

நாடு முழுவதும் வரும் திங்கள் , செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களும் வங்கிகள் இயங்காது. வங்கி கிளைகள் , அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும். தொடர்ச்சியாக 3 நாட்கள் வங்கிகள் வேலை செய்யாது என்பதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே பின்வரும் 4 முக்கிய விஷயங்களை மக்கள் தெரிந்து கொள்வது நல்லது.


வங்கிகள் 3 நாள் வேலைநிறுத்தம்: பணப் பரிவர்த்தனைக்கு மாற்று வழிகள்!

தொடர் ஸ்டிரைக் காரணமாக வங்கிகள் இயங்காது எனவே மக்கள் நேரடியாக வங்கி கிளைகளில் பெறும் சேவைகளை பெற முடியாது. எனவே முன்கூட்டியே திட்டமிட்டு வேலைகளை முடித்து கொள்ளுங்கள் என அனைத்து பொது துறை மற்றும் தனியார் வங்கிகள் சார்பாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு தடையில்லாமல் வங்கி சேவைகள் கிடைக்க ஏதுவாக பொதுத்துறை மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் அனைத்தும் இன்று ஞாயிற்றுக்கிழமையான (செப்டம்பர் 27 ) முழுமையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே, உங்களது அவசரமான வங்கி பணிகளை இன்றே முடித்து கொள்ளுங்கள் இல்லை என்றால் வியாழன் வரை காத்திருக்க வேண்டும்.

யூபிஐ, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் வாலட்டுகள் போன்ற ஆன்லைன் வங்கி சேவைகள் எப்போதும்போல் தடையின்றி 24 மணி நேரமும் செயல்படும். எனவே மக்கள் போனில் உள்ள பேங்கிங் செயலிகள் மூலம் பணம் அனுப்புவது , யூபிஐ பயன்படுத்துவது ஆகியவற்றை தொடரலாம். இதில் எந்த பாதிப்பும் இருக்காது. கடன் செலுத்துவதாக இருந்தால் கூட ஆன்லைனிலேயே செலுத்தலாம்.


வங்கிகள் 3 நாள் வேலைநிறுத்தம்: பணப் பரிவர்த்தனைக்கு மாற்று வழிகள்!

ஏடிஎம் இயந்திரங்கள் வழக்கம்போல இயங்கும். வேலைநிறுத்த நாட்களில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய ஏடிஎம்களில் போதுமான பணத்தை நிரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வழக்கமாக ஒரு மாதத்திற்கு இத்தனை முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம் என்ற விதியை இந்த 3 நாட்களுக்கு மட்டும் தளர்த்தியுள்ளன. எனவே தடையில்லாமலும் அபராத அச்சம் இல்லாமலும் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் மற்றும் பிற ஏடிஎம் சேவைகளையும் பெறலாம். தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவது முடியாது. எனவே அவசர தேவை உள்ளது நகை அடகு வைக்க வேண்டும் என்றால் இன்று வங்கி வேலை நாள் என்பதால் வேலையை முடித்து கொள்ளுங்கள். அதே போல அடகு வைத்த நகையை மீட்க முடியாது. இன்று அதை செய்யவில்லை என்றால் வியாழன் வரை காத்திருக்க வேண்டும்.

வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 90% வங்கி ஊழியர்களை உள்ளடக்கிய ஐக்கிய வங்கி யூனியன்களின் கூட்டமைப்பு இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை , ஓய்வூதிய சீர்திருத்தங்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு சீரான அகவிலைப்படி போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் நடக்கிறது.

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
உயிருக்காக போராடும் யானைக் குட்டி ‘மாயா’: சிறப்பு சிகிச்சைக்காக குஜராத்துக்கு ஹெலிகாப்டரில் இடமாற்றம்!
உயிருக்காக போராடும் யானைக் குட்டி ‘மாயா’: சிறப்பு சிகிச்சைக்காக குஜராத்துக்கு ஹெலிகாப்டரில் இடமாற்றம்!
விசா நடைமுறைகளில் தளர்வு - யார் யாருக்கு சலுகை: சிறப்பம்சம் என்ன?
விசா நடைமுறைகளில் தளர்வு - யார் யாருக்கு சலுகை: சிறப்பம்சம் என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!
மனைவி மீது சந்தேகம்... ஒரே குடும்பத்தில் 7 பேர் கொலை! பெங்களூருவில் கார் ஓட்டுநரின் பயங்கரம்
மனைவி மீது சந்தேகம்... ஒரே குடும்பத்தில் 7 பேர் கொலை! பெங்களூருவில் கார் ஓட்டுநரின் பயங்கரம்
Embed widget