மேலும் அறிய

CRIME: 2 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை: இளைஞனின் தாயை துப்பாக்கியால் சுட்ட சிறுமி: நடந்தது என்ன?

டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனின் தாயை துப்பாக்கியால் சுட்ட சிறுமியை காவலதுறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் தனக்கு அநீதி இழைத்த நபரின் தாயை 16 வயது சிறுமி துப்பக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

துப்பாக்கியால் சுட்ட 16 வயது சிறுமி:

டெல்லியின் பஜன்புரா பகுதியில் கோண்டா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 50 வயது  பெண் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல் தனது கடையில் இருந்த அந்த பெண்ணை நோக்கி, வந்த 16 வயதே ஆன சிறுமி திடீரென தான் மறைத்து வைத்து இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். அதில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரள்வதற்குள், அந்த சிறுமி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி:

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்து, காயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவத்தை பார்த்த அங்கிருந்த நபர்கள், குறிப்பிட்ட சிறுமி தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் போது தான், அவர் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது உறுதியாகியுள்ளது.

காரணம் என்ன?

அதன்படி, துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுமி கடந்த 2021ம் ஆண்டு காயமடைந்த பெண்ணின் மகனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், 25 வயதான அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான், அந்த இளைஞரின் தாயாரை சம்பவம் நடந்த 2 ஆண்டுகளுக்குப் பின், 16 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

சிறுமியிடம் தீவிர விசாரணை:

இதையடுத்து சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கொலை முயற்சியில் ஈடுபட்ட சிறுமியை பிடித்த போலீசார், அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னிடம் அத்துமீறிய நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், சிறுமி ஏன் இளைஞரின் தாயாரை சுட்டார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது, சிறுமியிடம் விரிவான விசாரணையை நடத்திய பிறகு அவரின் நோக்கம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண், அவரது குடும்பத்தினர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்திடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, சிறுமிக்கு ஆயுதம் எப்படி, எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரின் தாயை சிறுமி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget