ஆன்லைன் கேமிற்கு அடிமை! தட்டிக்கேட்ட தந்தை! ₹14 லட்சத்தை இழந்து சிறுவன் தற்கொலை பெற்றோர்களே உஷார்!
யாஷ் தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து ₹14 லட்சத்தை இழந்திருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறினார். தந்தை திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார்

ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையான மாணவன் ஒருவர் தந்தை கண்டித்தால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
14 வயது சிறுவன் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மோகன்லால்கஞ்சில் ஆறாம் வகுப்பு மாணவன் யாஷ் ஆன்லைன் மொபைல் கேமிங்கிற்கு அடிமையாகி இருந்ததுள்ளார், யாஷ் தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து ₹14 லட்சத்தை இழந்திருந்தார். அவரது தந்தை வங்கியில் இருந்து பணம் எடுக்கச் சென்றபோது இது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தந்தை இது குறித்து கேட்ட நிலையில் சிறுவன் யாஷ் தற்கொலை செய்து கொண்டார். சிறுவன் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, போலீசா இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகள் மற்றும் இணைய பயன்பாட்டை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று லக்னோ காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
மொபைல் கேமிங் போதை உயிர்களைப் பறித்தது
காவல்துறையினரின் தகவல்படி, யாஷ் ஆன்லைன் கேமிங்கிற்காக 14 லட்சத்தை செலவிட்டுள்ளார். அவரது தந்தை சுரேஷ் யாதவ் இதை அறிந்து அவரை திட்டியபோது, யாஷ் படிப்பது போல் நடித்து வீட்டின் மேல் அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சகோதரி அவர் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார், உடனடியாக சிறுவனை சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்து அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
பெற்றோருக்கு காவல்துறை வேண்டுகோள்.
லக்னோ துணை காவல் ஆணையர் (தெற்கு) நிபுன் அகர்வால் கூறுகையில், விசாரணையில் யாஷ் தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து ₹14 லட்சத்தை இழந்திருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறினார். தந்தை திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார். மைனர் குழந்தைகள் இணையம் மற்றும் வங்கிக் கணக்குகளை அணுகுவதை கண்காணிக்கவும், சைபர் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தபெற்றோருக்கு அவர் அறிவுறுத்தினார்.
தந்தையின் வலி
யாஷின் தந்தை சுரேஷ் யாதவ், "நான் அவனிடம், 'மகனே, நீ தவறு செய்கிறாய். உனக்காக பணம் சம்பாதிக்க நான் கடினமாக உழைக்கிறேன்' என்று சொன்னேன்" என்று கூறினார். இந்த சம்பவம் சிறுவனின் குடும்பத்தினரை ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சைபர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அவசியம்
மோகன்லால்கஞ்ச் காவல் நிலையத் தலைவர் டி.கே. சிங் கூறுகையில், யாஷ் வங்கியில் இருந்து பணம் எடுத்ததை அவரது குடும்பத்தினர் அறிந்த பிறகு தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் கேமிங் மற்றும் சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்குமாறு பெற்றோர்களை போலீசார் வலியுறுத்தினர்.
சைபர் அபாயங்களிலிருந்துஎப்படி தவிர்ப்பது,
- குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கவனியுங்கள்.
- வங்கிக் கணக்கு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
- சைபர் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான இணைய பயன்பாடு பற்றி குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
- மொபைல் கேமிங் அடிமைத்தனத்தின் அறிகுறிகளை அடையாளம் கண்டு, சரியான நேரத்தில் நடவடிக்கை எடுங்கள்.
இந்த துயர சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாகக் குறிப்பிட்டுள்ள லக்னோ காவல்துறை, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் டிஜிட்டல் நடத்தையில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.






















