மேலும் அறிய

மின்னல் தாக்கி ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு! பீகாரில் சோகம் – முதலமைச்சர் இழப்பீடு அறிவிப்பு

பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகாரில் நேற்று பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் ஆங்காங்கே மின்னல் தாக்கியது. 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முதலமைச்சர் அலுவலகத்தின் (CMO) அறிக்கையின்படி, பெகுசராய் ஐந்து பேரும், தர்பங்கா நான்கு பேரும், மதுபனி மூன்று பேரும், சமஸ்திபூரில் ஒருவரும் இறந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புகளுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்து, இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு முதலமைச்சர் நிதிஷ்குமார் மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய பீகார் பொருளாதார கணக்கெடுப்பு (2024-25) அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் மின்னல் அல்லது இடியுடன் கூடிய மழையால் 275 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது.

இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை மற்றும் புயல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாநிலத்தின் பல பகுதிகளுக்கு வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவுர் பஜார், முர்லிகஞ்ச், மாதேபுரா, சதார்கட்டியா, கைலாத், சிங்கேஷ்வர், பன்மன்கி, குமார்கண்ட், பர்காமா, சங்கர்பூர், கம்ஹாரியா, சுபால், திரிவேணிகஞ்ச், பிப்ரா, மரவுனா, கிஷன்பூர், கோகார்திஹா, பிரதாப்கஞ்ச், சத்தபூர், ரகோபூர், சராய்கர் பாப்தியாஹி, நிர்மாலி, புல்பராஸ், லௌகாஹி மற்றும் பசந்த்பூர் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டவைக்குள் அடங்கும்.

இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
Embed widget