மேலும் அறிய

Cheetah: தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வரும் 12 சிறுத்தைகள்..! எப்போது? எங்கே?

பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 காட்டுச் சிறுத்தைகள் சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு (KNP) கொண்டு வரப்படும்.

பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 காட்டுச் சிறுத்தைகள் இறுதியாக வரும் சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் (KNP) வந்து சேரும், அங்கு கடந்த ஆண்டு நமீபியாவிலிருந்து இதுபோன்ற எட்டு பூனைகள் கொண்டுவரப்பட்டன என  இந்தியாவின் சிறுத்தை புத்துயிர் திட்டத்துடன் தொடர்புடைய வனவிலங்கு நிபுணர் கூறினார்.  

சிறுத்தைகள்:

இந்த சிறுத்தைகளில் ஏழு ஆண்களும், ஐந்து பெண்களும் அடங்கும். இவை வெள்ளிக்கிழமை மாலை தென்னாப்பிரிக்காவின் கௌடெங்கில் உள்ள OR டாம்போ சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை (IAF) போக்குவரத்து விமானத்தில் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள தங்கள் புதிய வீட்டிற்கு பயணத்தைத் தொடங்கும் என  திட்ட பங்கேற்பாளர் மற்றும் நிபுணர் தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்க சிறுத்தைகள் முதலில் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படை தளத்திற்கு சனிக்கிழமை காலை வந்து சேரும் என்றும், 30 நிமிடங்களுக்குப் பிறகு அவை 165 கிமீ தொலைவில் உள்ள ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள KNP க்கு IAF ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சனிக்கிழமை வருகை:

வரும் சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் KNP இல் தரையிறங்கிய பிறகு, அவைகள் அரை மணி நேரத்திற்குப் பிறகு (மதியம் 12.30 மணி) தனிமைப்படுத்தப்பட்ட போமாஸில் (அடைப்புகளில்) வைக்கப்பட உள்ளன. தென்னாப்பிரிக்க சிறுத்தைகளுக்காக 10 தனிமைப்படுத்தப்பட்ட போமாக்களை அமைத்துள்ளதாக KNP இயக்குனர் உத்தம் சர்மா தெரிவித்தார். சனிக்கிழமை வர இருக்கும் சிறுத்தைகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக உத்தம் சர்மா கூறியுள்ளார்.  

கடந்த ஆண்டு செப்டம்பர் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒரு ஆய்வுக்குழு KNP க்கு வந்து வனவிலங்கு சரணாலயத்தில் உலகின் அதிவேக நில விலங்குகளை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளைப் பார்க்க வந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் பாலூட்டிகளின் இடமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே கையெழுத்தானது.

3 ஆயிரம் டாலர்:

தென்னாப்பிரிக்கா இந்த சிறுத்தைகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. ஆனால், ஒவ்வொரு சிறுத்தைக்கும் இந்தியா 3,000 அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும் என்று வனவிலங்கு நிபுணர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த தென்னாப்பிரிக்க சிறுத்தைகளை விமானத்தில் கொண்டு வர இந்தியா திட்டமிட்டிருந்தது, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே முறையான இடமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் தாமதம் ஏற்பட்டதால் சிறுத்தைகள் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. 

இந்த சிறுத்தைகளின் கண்டங்களுக்கு இடையிலான இடமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தாமதம் ஏற்பட்டதால், சில நிபுணர்கள் டிசம்பரில் தென்னாப்பிரிக்க சிறுத்தைகளின் ஆரோக்கியம் குறித்து கவலை தெரிவித்தனர், ஏனெனில் இந்த விலங்குகள் ஜூலை 15 முதல் தங்கள் சொந்த நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட தனிமைப்படுத்தலின் விளைவாக, இந்த விலங்குகள் தங்கள் உடற்தகுதியை இழந்திருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman on Divorce : ”இப்படி பண்ணிட்டியே சாய்ரா..சுக்குநூறா உடைஞ்சுட்டேன்” மனம் திறந்த AR.ரஹமான்AR Rahman Saira Divorce Reason : ”வலியும், வேதனையும் அதிகம்”ஏ.ஆர் - சாய்ரா பகீர்!BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
Embed widget