மேலும் அறிய

’முழு ஊரடங்கை மிகக் கடுமையாக்க முடிவு!’ - முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை

கொரோனா தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க இன்று தலைமைச்செயலகத்தில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியது

கொரோனா தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க இன்று தலைமைச்செயலகத்தில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியது. கூட்டத்தின் முடிவில் கொரோனா பரவல் கட்டுப்பாடு தொடர்பாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் முழு ஊரடங்கை மிகவும் கடுமையாக்குவது என அனைத்துக் கட்சியினரின் ஆலோசனையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மக்கள் நல்வாழ்வு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் டி.ஆர்.பாலு,ஆர்.எஸ்.பாரதி; அதிமுக சார்பில் வெ.பரமசிவம்; காங்கிரஸ் தரப்பிலிருந்து விஜயதாரணி, முனிரத்னம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நைனார் நாகேந்திரன்,எம்.என்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.


’முழு ஊரடங்கை மிகக் கடுமையாக்க முடிவு!’ - முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை

  • கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் உரிய நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. 

  • நோய்த் தொற்று வேகமாகப் பரவிவரும் இக்காலக் கட்டத்தில், அனைத்துக் கட்சியினரும் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சி நிகழ்வுகள் போன்றவற்றை முற்றிலுமாகத்.தவிர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
  • நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதால், கள அளவில் அனைத்துக் கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைபிடித்திடுமாறு மக்களை அறிவுறுத்தி, வழிகாட்டிகளாக நடப்பது என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் அனைவரும் முழு மனதோடு ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

  • நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆலோசனைகளை வழங்க, சட்டமன்றக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர்ஆலோசனைக் குழு அமைக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

  • அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஒருமனதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இரண்டு வார ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

 

தலைப்பு செய்திகள்

TN Election Results LIVE: தாராபுரத்தில் அதிமுக முன்னிலை- 2ஆம் இடத்தில் தவெக
TN Election Results LIVE: தாராபுரத்தில் அதிமுக முன்னிலை- 2ஆம் இடத்தில் தவெக
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக மரகதம் குமரவேல் முன்னிலை! திமுக, அதிமுக எத்தனை வாக்குகள்?
மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக மரகதம் குமரவேல் முன்னிலை! திமுக, அதிமுக எத்தனை வாக்குகள்?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN Election Results LIVE: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Kilambakkam: அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Embed widget