விஜயகாந்த் பேரைச் சொல்லி கைதட்டல் வாங்கிய விஜய்...பிரேமலதா என்ன ரியாக்ஷன் கொடுத்தார்?
அரசியலுக்கு வந்ததற்குப் பிறகு வந்ததல்ல இந்த அண்ணன் தம்பி உறவு என விஜய் பற்றி தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் அவர் எங்களுக்கு தம்பி"அரசியலுக்கு வந்ததற்குப் பிறகு வந்ததல்ல இந்த அண்ணன் தம்பி உறவு என பண்ருட்டியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
மதுரையில் விஜயகாந்த் பற்றி விஜய்
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடந்தது. இந்த நிகழ்வில் விஜய் சமகால அரசியல் பிரச்சைகளைப் பெற்றி பேசாமல் திமுக மற்றும் பாஜக எதிர்ப்பை மட்டும் பதிவு செய்ததது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பட வாய்ப்பு இல்லாததால் தான் அரசியலுக்கு வரவில்லை என்று பேசியது சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேலும் மதுரையில் மாநாடு என்பதால் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை விஜய் நினைவு கூர்ந்தார். " மதுரைக்கு வந்தது எனக்கு முதலில் நினைவுக்கு வருவது என் அண்ணன் விஜய்காந்த் தான் " என பேசினார்.
விஜய் பேச்சு பற்றி பிரேமலதா
உள்ளம் தேடி இல்லம் நாடி என்னும் பிரச்சார பயணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். மேலும் கேப்டனின் ரத யாத்திரை, மக்களைத் தேடி மக்கள் தலைவர் என்னும் பெயர்களில் இந்த பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி, மாளிகை மேடு, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். அதன்படி பண்ருட்டி பேருந்து நிலையப் பகுதிகளில் பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், மக்களுக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் அதனை எதிர்த்து மக்களுடன் தேமுதிக தொடர்ந்து போராடும் என தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,*மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் விஜயகாந்த்தை அண்ணன் என குறிப்பிட்ட நிலையில் விஜய் எங்களுக்கு தம்பி,அரசியலுக்கு வந்ததற்கு பிறகு வந்ததல்ல இந்த அண்ணன் தம்பி உறவு,கேப்டன் விஜயகாந்த் திரைத்துறையில் வந்ததில் இருந்து தொடர்கிறது இந்த உறவு என்றார்.மேலும் தேமுதிக தற்பொழுது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என தெரிவித்த அவர், ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்






















