மேலும் அறிய
Advertisement
தேர்தலில் பாஜக வெற்றி பெற்று விட்டால் இந்த சூழல் ஏற்படும் - தொழிற்சங்க தலைவர் சௌந்தர்ராஜன்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று விட்டால், எந்த மாற்றத்தையும் நாம் உள்நாட்டு போர் நடத்திய பெற வேண்டிய சூழல் ஏற்படும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று விட்டால், எந்த மாற்றத்தையும் நாம் உள்நாட்டு போர் நடத்திய பெற வேண்டிய சூழல் ஏற்படும் என தருமபுரியில் தொழிற்சங்க தலைவர் சௌந்தர்ராஜன் பேசினார்.
தருமபுரி மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் புதியதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அனைத்து தொழிற்சங்க யூனியன் தலைவர் முன்னாள் எம்எல்ஏ சௌந்தரராஜன் கலந்துகொண்டு புதியதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்த கருத்தரங்கில் பேசிய தொழிற்சங்க தலைவர் சௌந்தர்ராஜன் பேசியதாவது: தற்பொழுது வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் புதியதோர் உலகம் செய்வோம் என்று, ஒவ்வொரு நாட்டின் புதிய மாற்றங்களையும், கிடைக்கின்ற வாய்ப்பை கொண்டு நாம் செய்து முடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இது போன்ற மதவாதிகளையும், இனவாதிகளையும் நாம் வீழ்த்த வேண்டும். ஒருவேளை இந்த ஆட்சியை, அரசாங்கத்தை நாம் இந்தத் தேர்தலில் அதை செய்யாமல் போனால், அமைதியாக, மோதல் இல்லாமல், சேதம் இல்லாமல், ஓட்டு போட்டு அமைதியான முறையில் மாற்ற முடியும். கத்தியின்றி, இரத்தமின்றி என்பது போல. ஒருவேளை இந்த தேர்தலில் நாம் இதை செய்யாமல் போனால், மீண்டும் பாஜகவே வெற்றி பெற்றால், எந்த மாற்றத்தையும் நம்மால் உள்நாட்டு போர் நடத்தாமல், நாம் 10 பேர் இறக்கனும், அவர்கள் 10 பேர் இறக்கனும், என்றில்லாமல் எதையும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட ஒரு கொடிய சூழல்தான் இருந்து வருகிறது.
நாம் என்ன செய்யப் போகிறோம். தமிழ்நாட்டில் இப்போது உள்ள அரசாங்கத்திற்கும் நமக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அந்த கருத்து வேறுபாடுகள் இருப்பதால்தான், வெவ்வேறு கட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஆனால் நமக்குள் இருக்கின்ற இந்த வேறுபாடுகள், இன்று அல்ல, நாளை அல்ல, என்றாவது ஒருநாள் பேசி தீர்த்துக் கொள்ள முடியும். இந்த தகராறு என்பது ஒரே இடத்தில் இருக்கக்கூடிய, நமக்குள் இருப்பது. அதற்காக வெளியூர் காரனை உள்ளே விட முடியாது. இதற்காக நாம் பல்வேறு போராட்டங்களை நடத்த முடியும். ஆனால் அதற்கு இடையில் ஜனநாயகத்திற்கு எதிராக, ஜனநாயகத்தை சுரண்டுகின்ற இந்த பாஜக அரசை மீண்டும் நாம் அனுமதிக்க கூடாது. ஆகவே மாற்றம் என்பது மாநிலத்தில் ஏற்பட வேண்டும், ஒன்றியத்தில் ஏற்பட வேண்டும், எல்லா நாடுகளில் ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் சங்கத்தைச் சார்ந்த தருமபுரி மாவட்ட செயலாளர் சேகர், பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion