மேலும் அறிய
Advertisement
ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பி வீரர்கள் சென்ற வாகனம்; துண்டான கால்கள்
வாகனத்தை ஓட்டிச்சென்ற ரிஜோ மற்றும் சின்னதுரையின் கால் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கி துண்டானது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே துணை ராணுவ படை வீரர்கள் (சி.ஆர்.பி) சென்ற வாகனம் சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வீரர்கள்
4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆவடி துணை ராணுவ பயிற்சி மையத்தை சேர்ந்த 71 துணை ராணுவ வீரர்கள் (சி.ஆர்.பி) கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பயிற்சி முடித்து விட்டு மீண்டும் இன்று 5 இராணுவ வாகனத்தில் ஆவடி பயிற்சி மையத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் துணை இராணுவ வீரர்கள் ஓட்டி வந்த வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு சி.ஆர்.பி. வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற ரிஜோ மற்றும் சின்னதுரையின் கால் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கி துண்டானது.
அதனைத் தொடர்ந்து நீண்ட நேரப்போரட்டத்திற்கு பிறகு இருவரையும் லாரியின் இடிபாடுகளிலிருந்து சக வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு மருத்துவனையில் தலைமை காவலர் ராமசந்திரன் மற்றும் காவலர் வல்லவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இவ்விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion