மேலும் அறிய
Advertisement
பழமை வாய்ந்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் - ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவிகள்
தருமபுரி அருகே அரசு பள்ளியில், தான் பணியாற்றிய காலங்களில் சேகரித்து வந்த பழமை வாய்ந்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைத்துள்ள தலைமை ஆசிரியர் - ஆர்வமுடன் பழங்கால பொருட்களை பார்வையிடும் மாணவிகள்.
தருமபுரி மாவட்டம் இண்டூன் அடுத்த நத்த தள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர், பத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக முசோலினி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அரசு பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொணர்வது, பள்ளி வளாகத்தை மரம்,செடி கொடிகள் வைத்து பசுமையாக மாற்றுவது போன்ற பணிகளை பல்வேறு ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். ஆனால் மாணவர்களின் கல்விக்கு ஏற்ற வகையில், பயன்படும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர் முசோலினி, தான் பணியாற்றக்கூடிய காலங்களில் பழகால பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது இந்த பழங்கால பொருட்களை சேகரித்து மாணவர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும், அதன் மூலம் அவர்களது பாடத்திற்கும், பழங்கால வாழ்க்கை முறையை அவர்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என யோசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் பழங்கால பொருட்கள், வரலாற்று நினைவுச் சின்னங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த பழங்கால பொருட்களை சேகரித்து தான் பணியாற்றும் பள்ளிகளில் மாணவர்களின் பார்வைக்கு அருங்காட்சியகம் போல் அமைத்து பாதுகாத்து வந்துள்ளார். மேலும் மாணவர்கள் மூலமாக பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏதேனும் கிடைத்தால் அதையும் சேகரித்து வந்துள்ளார். இந்நிலையில் பணியாற்றுகின்ற பள்ளியில் விட்டு வருகின்ற பொழுது, சில பொருட்கள் காணாமல் போய் வந்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது நத்தள்ளி உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவுடன் தான் தேடித் திரிந்த சேகரித்த பண்டைய கால வரலாற்றை நினைவு கூறும் பொருட்களை, தனி அறையில் அருங்காட்சியமாக அமைக்க திட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து பள்ளி வராண்டாவில் சிறிய அறையாக மாற்றி அதில் தான் சேகரித்த அனைத்து பொருட்களையும் வைத்து சிறிய அருங்காட்சியகத்தை அமைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதில் நான்கு பழங்கால ஓலைச் சுவடிகள் தெலுங்கில் எழுதப்பட்ட ராமாயணம், தமிழில் எழுதப்பட்ட மருத்துவ ஓலைச்சுவடி, திசுல்தான் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டுகள், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடு களிமண் அச்சு, கற்கால மனிதர்கள் உபயோகப்படுத்திய கல் ஆயுதங்கள், மரப்பாசி பொம்மைகள், விஜயநகர பேரரசு காலத்து சிலைகள், மான் கொம்புகள், ஆகியவற்றை அமைத்துள்ளார். மேலும் மொகாலய மன்னர் பயன்படுத்திய இரும்புவால், சித்த மருத்துவத்திற்கு பயன்படுத்திய கற்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய சினிமா எடுக்க பயன்படுத்தப்பட்ட டேப்ரெக்கார்டர், ஓவிய ரெக்கார்ட், கிராமபோன் 15 எம்எம் சினிமா ஃபிலிம் ப்ரொஜெக்டர், டஐப்பஇங்க இயந்திரம், ரேடியோ என தற்போதைய 2கே கிட்ஸ் பார்த்திராத பொருட்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் அவ்வப்போது வந்து பார்வையிட்டு இந்த பொருட்களை பற்றி தெரிந்து கொள்வதும், வரலாற்று ஆசிரியர்கள் இது தொடர்பான பாடங்களை எடுக்கும் பொழுது இந்த அருங்காட்சியகத்திற்கு அழைத்து வந்து மாணவர்களுக்கு விளங்கும்படி எடுத்துக் கூறுவர் வருகின்றனர். இதனால் இந்த அருங்காட்சியகத்திற்கு வருவதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு வந்து செல்கின்றனர். இதனால் மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர் பாடம் நடத்துகின்ற பொழுது பாதி புரியாமல் இருந்தாலும், இந்த அருங்காட்சியகத்தில் வந்து நம் முன்னோர்கள் பயன்படுத்திய பண்டைய கால பொருட்களை நேரில் பார்த்து, அதனை பயன்படுத்தியவர்கள் மற்றும் அதனுடைய பயன்பாடுகள் குறித்து ஆசிரியர் விளக்கும் போது முழுமையாக பாடத்தினை உள்வாங்கிக் கொள்கின்றனர். இந்த பள்ளி அருங்காட்சியகத்தில் மாணவர்கள் மட்டுமல்லாமல், பணியாற்றுகின்ற ஆசிரியர்களும் அவ்வப்போது ஓய்வு நேரங்களில் பழங்கால பொருட்களை பார்த்து அதன் பயன்பாடுகள் குறித்தும், அறிந்து கொள்கின்றனர்.
மேலும் தமிழகத்திலேயே அருங்காட்சியகங்கள் எந்த பள்ளியிலும் இல்லாத நிலையில் தலைமையாசிரியரின் முயற்சியால், நத்ததள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் மட்டுமே இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை வந்து பார்வையிடும் மாணவ, மாணவிகள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள இது உதவிகரமாக இருந்து வருகிறது. மேலும் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு வெறுமனே பாடப்புத்தகத்தில் இருக்கின்ற கல்வியை மட்டும் கொடுக்காமல், கூடுதலாக அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கு இது போன்ற அருங்காட்சியங்கள் பேருதவியாக இருப்பதாக தலைமை ஆசிரியர் மிசாலினி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
உலகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion