தர்மபுரி: விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு செக்! இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!
தர்மபுரி நகரில் விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க நவீன ஏ என் பி ஆர் கேமரா பொருத்த திட்டமிட்ட பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வரை 284 தனியார் பஸ்கள், 394 அரசு பஸ்கள், 54 மினி பஸ்கள், 2878 சரக்கு வாகனங்கள், 3558 லாரிகள், 1464 பள்ளி வாகனங்கள், 2149 ஆட்டோக்கள், 50 ஷேர் ஆட்டோக்கள், 51 ஆயிரம் போக்குவரத்து அல்லாத டூவீலர் கார் போன்ற வாகனங்கள், 1492 போக்குவரத்து வாகனங்கள் என 5 லட்சத்து 24 ஆயிரத்து 753 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவை கடந்த ஆறு ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. தினமும் 50 முதல் 200 வரை புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் விதிமீறல்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தர்மபுரி நகரில் ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் ஒரு சதவீதம் பேர் மட்டுமே இதே போல் சிக்னல் சந்திப்பில் நிற்காமல் செல்வது பைக்கில் மூணு பேர் செல்வது அதிக வேகமாக வாகனத்தை ஓட்டுவது சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது எதிர் திசையில் வாகனத்தை ஓட்டுவது என விதிமிரல்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது.
விதிமீறல்கள்
வாகன ஓட்டிகளின் விதிமீறல்களை கண்காணிக்க போக்குவரத்து போலீசாரின் எண்ணிக்கை பற்றாக்குறையாக உள்ளது. தர்மபுரி போக்குவரத்து போலீசில் 2 எஸ்ஐகள், இரண்டு எஸ் எஸ் ஐ கல், ஆறு போலீசார் மட்டுமே உள்ளனர். இதனால் விதிகளை மீறும் வாகனங்களை கட்டுப்படுத்துவது பெரும் சிரமமாக இருந்து வருகிறது.
நகரில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும் அவை விதிகளை மீறும் குற்றங்களை கட்டுப்படுத்த பயன்படுவதில்லை. இதனால் விதிகளை மீறும் வாகனங்களை கட்டுப்படுத்த தர்மபுரி மாவட்ட காவல்துறை நவீன ஏ என் பி ஆர் கேமரா ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகுநேஷன் கேமரா பொருத்த திட்டமிட்டு உள்ளது.
இதை ஒட்டி வாகன ஓட்டிகளுக்கு எங்கெங்கே விதிகளை மீறுகின்றனர் என போலீசார் சர்வே எடுத்தனர். இதைத் தொடர்ந்து நான்கு ரோடு சந்திப்பு, ப்ரோக்கர் ஆபீஸ், பென்னாகரம் மேம்பாலம், அரசு மருத்துவமனை, எஸ்வி ரோடு, பெரியார் சிலை, கலெக்டர் அலுவலகம் என எட்டு இடங்களில் இந்த நவீன கேமராக்களை பொருத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த கேமராக்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தாலோ அல்லது வேறு வகையில் போக்குவரத்து விதிமீறல்களை மீறினாலோ உடனடியாக அந்த வாகனத்தின் நம்பர் பிளேட் புகைப்படம் எடுக்கிறது. அந்த புகைப்படத்துடன் வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள உரிமையாளர் முகவரிக்கு அபராத நோட்டீஸ் தபால் மூலமோ, செல்போன் எண்கள் மூலமோ அனுப்பி வைக்கப்படும்.
இது குறித்த காலத்திற்குள் அபராத தொகை கட்டாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தேவையான இடங்களை தேர்வு செய்து ஏஎன்பிஆர் கேமராக்களை பொருத்த வேண்டும் என டோல் பிளாசா நிர்வாகத்திற்கு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
மாவட்ட காவல்துறை எடுத்த முடிவு
இந்த புதிய நவீன கேமராக்கள் பொருத்தும் திட்டம் மாவட்டம் முழுவதும் உள்ளது என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் கூறுகையில் தர்மபுரி நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி விதிகள் மேலும் வாகனங்களை கட்டுப்படுத்தவும் புதிய நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
இதற்காக தர்மபுரி டவுன் காவல் நிலையத்திற்கு எட்டு இடங்களில் பொருத்தலாம் என திட்ட வரவை மாவட்ட எஸ்பிக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.
ஏ என் பி ஆர் கேமராவின் வேலைகள்
கேமராக்கள் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் படித்து டிஜிட்டல் மயமாக்கும் கேமராவாகும். இந்த கேமராக்கள் சர்வர்கள் அல்லது தூண்டுதல்களால் வீடியோக்களாகவோ அல்லது புகைப்படங்களாகவும் பதிவு செய்யும்.
சாட் எடுக்க வெளிப்புற தூண்டுதல்கள் தேவையில்லை. செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படுகிறது. இந்த கேமராக்கள் நம்பர் பிளேட்டுகளின் எண்களை படிக்க ஐந்து அடி தூரம் போதுமானது. வேறு எந்த கேமராவிலும் இந்த குறுகிய தூரத்தில் உள்ள நம்பர் பிளேட்டுகளை படிக்க முடியாது.
ஒரு பாதைக்கு ஒரு கேமரா மட்டுமே தேவைப்படும். இந்த கேமராக்கள் வாகனங்கள் உள்ளே நுழைவதையும் வெளியேறுவதையும் கண்காணித்து படம் பிடிக்கும். இது ஒரு கேமரா போலீஸ் ஆகவே செயல்படுகிறது.
இது நவீன வசதிகளுடன் நகரத்திற்காக வடிவமைக்கப்பட்டதாகும் விதி மீறிய வாகனத்தின் நேரம், இடம், திசை, வேகம், தோற்றம் விழிப்புட்டல்கள் மற்றும் ஓட்டுநரை பற்றிய பொது தகவல்கள் போன்ற நிகழ்வு நேர வாகன தகவல்களை உடனுக்குடன் பெற முடியும்.
இதனால் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இனி விதி மீறி ஓட்டவும் முடியாது ஒளியவும் முடியாது விதி மீறினால் ரசீது வீட்டுக்கே தேடி வரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.