மேலும் அறிய

Dharmapuri : ”மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பாலை கொட்டிய விவசாயிகள்” ஏன் என்று தெரியுமா?

"ஆவினில் சரியான விலையை நிர்ணயிக்க கூறி போராட்டம் நடத்தினர்”

மனு கொடுத்தும் பயனில்லை

ஆவின் மூலம்  பால் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் பால் கேனுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் பாலை கொட்டி மனு.

Dharmapuri : ”மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பாலை கொட்டிய விவசாயிகள்” ஏன் என்று தெரியுமா?

200 க்கும் மேற்பட்ட விவசாயிகள்

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள பெரமாண்டபட்டி கிராமத்தில் 25 ஆண்டுகளாக தமிழக அரசு  ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பால் ஊற்றி வந்தனர்.  

அரசு நிர்ணயித்த விலை கொடுப்பதில்லை

இந்த நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் சிவக்குமார் என்பவர் பால் கொள்முதல் செய்யும் பொழுது, பாலின் தரம் குறைவாக உள்ளதாக கூறி, அரசு நிர்ணயித்த விலையை விட, பாலுக்கு ருபாய் 10 வரை குறைத்து பணம் வழங்கியுள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அரசு 35 ரூபாய் லிட்டருக்கு வழங்கி வரும் நிலையில் விலை ஏன் குறைத்துக் கொடுக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

விவசாயிகளின் பெயரை வைத்து பணம் கொள்ளை

ஆனால் பால் கொள்முதல் செய்யும் ஊழியர்கள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு வருவதில்லை. மாறாக இரண்டு இளைஞர்களை வைத்து பால் கொள்முதல் செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள்  கேட்டால், உரிய பதில் கிடைப்பதில்லை. ஆனால் விவசாயிகளின் பெயரில் கணக்கு வைத்து, பணம் கொள்ளையடித்து வந்துள்ளார். 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், போலி கணக்குகள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகளுக்கு  புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்ந  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து விவசாயிகள் பால் கொள்முதல் விலை குறித்து கேட்டுள்ளனர்

விவசாயிகளை தாக்கிய இளைஞர்கள்

அப்போழுது இளைஞர்கள் விவசாயிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு வராமல், வேறு வேலை பார்ப்பத்தாகவும், அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் இன்று பெரமாண்டபட்டி பால் உற்பத்தியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பால் விலை முழுமையாக கொடுக்க வேண்டியும், பணிக்கு வராத ஊழியர்களை மாற்ற வலியுறுத்தியும், கேனில் கொண்டு பாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சாலையில் திடீரென கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பேச்சுவார்த்தை நடத்திய காவலர்கள்

அங்கு வந்த காவல் துறையினர் விவசாயிகளிடம் சேசாசுவார்த்தை நடத்தி, ஆட்சியரிடம் மனுஅளிக்க அழைத்து சென்றனர். அப்பொழுது பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளை ஏமாற்றும் ஊழியர்களை மாற்ற வேண்டும். இல்லையென்றால், தனியார் நிலையங்களுக்கு பால் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.  தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

மேலும் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பரபரப்பான நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, விவசாயிகள் பாலை கீழே கொட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாலை தனியார் வசம் கொடுக்காமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளடஹு

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget