தவறான வாட்ஸ் அப் செய்தி: உரிமைத்தொகை பதிவு செய்ய வந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள்
தவறான வாட்ஸ் அப் செய்தி பார்த்து மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்ய வந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள்
மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது என சமூக வலைதளங்களில் பரவிய தகவலால், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மகளிர் கூட்டம்.
மகளிர் உரி மைத்தொகை பதிவு செய்ய குவிந்த பெண்கள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான கடந்த வருடம் தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் அடுத்து விண்ணப்பித்த 60 சதவீதம் மகளிருக்கு நாளும் ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என மீண்டும் ஒரு முறை கால அவகாசம் வழங்கப்பட்டு கூடுதலாக மகளிருக்கு உதவி தேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் காலங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் பெண்கள் மகளிர் உரிமைத்தது கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர் இதனால் மீண்டும் ஒரு கால அவகாசம் கொடுத்து விண்ணப்பங்கள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கால அவகாசம் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் பரவியது. இதில் 17, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ போல் பரவியது.
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இதனை தொடர்ந்து தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காததை பெண்கள் மீண்டும் விண்ணப்பம் கொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு சென்றுள்ளனர்.
ஆனால் இதனையறிந்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, 16-ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் சனி மற்றும் திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களில் நடைபெற உள்ளதாக பொதுமக்கள் உடனே மனுக்கள் கொடுத்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைத் தளங்களில் பரவிய செய்தி முற்றிலும் பொய்யானது எனவும், பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் எனவும் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட பெண்கள் கூட்டம் கூட்டமாக 100-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அப்போழுது பணியில் இருந்த காவல் துறையினர், விசாரணை செய்து, சமூக வலைதளங்களில் வெளிவந்த செய்தி பொய்யானது. அதை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயிலில் முன்பு பெரிய பதாதையை வைத்து வைக்கப்பட்டது. மேலும் சமூக வலை தளங்களில் வெளிவந்த செய்தி உண்மை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பெண்கள் நுழைவாயிலில் உள்ள பதாதையை படித்து பார்த்து மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.