மேலும் அறிய

உலக அளவில் 85 சதவீத பெண்களுக்கு எதிராக டிஜிட்டல் வன்முறைகள்: அதிர்ச்சியூட்டும் தகவல்

பெண்களுக்கு எதிராக டிஜிட்டல் வன்முறைகள் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

என்னதான் உலகம் நாகரீகத்திலும் அறிவியல் வளர்ச்சியும் உச்சம் தொட்டாலும் பாலின பாகுபாடு  என்பதும் அதனால் நிகழும் அவலங்களும் தொடர்கதையாகி வருகிறது. முன்னேற்றம் அடையாத காலத்தில் அதற்கு ஏற்றது போலவும் விஞ்ஞான உலகத்தில் அதற்கு ஏற்றது போலவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

அந்த வகையில் தற்போது புதிய அவலமாய் உருவெடுத்து இருப்பது பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறைகள் என்கின்றனர் மகளிர் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள். 

டிஜிட்டல் புரட்சியால் மொபைல், இணையம் ஆகியவற்றை அணுகும் வசதி எளிதில் மக்களுக்கு கிடைக்கிறது. இந்த புரட்சி சந்தேகத்திற்கு இடமின்றி விழிப்புணர்வையும் அதிகாரத்தையும் மக்களிடையே அதிகரித்துள்ளது. 

பாலின சமத்துவத்திற்கான பாதையில் பெண்களுக்கான டிஜிட்டல் சமத்துவமும் பாதுகாப்பான வேலியும் முக்கியமானது. ஆனால் பெண்கள் மீது டிஜிட்டல் வன்முறை அத்தகைய சமத்துவம் நோக்கும் பாதையில் சவால்களை அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளாக நிஜ உலகில் பெண்கள் எதிர் கொள்ளும் வன்முறையும் டிஜிட்டல் உலகில் வேறு வடிவத்தில் போடுவது என்பது அவர்களின் பெருத்த ஆதங்கம். 

இது குறித்து பெண்ணியம் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:- 

தி எக்னாமிக்ஸ் இன்டலிஜென்ஸ் யூனிட் என்னும் அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தி இருந்தது.  இந்த ஆய்வின் படி உலக அளவில் 85 சதவீத பெண்கள் ஆன்லைன் வன்முறையை எதிர்கொண்டு வருகின்றனர்.
 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் படி கோவிட் தொற்றுக்குப் பிறகு பெண்களுக்கு எதிரான சைபர் குற்ற வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இதில் பிளாக்மெயில் செய்வது, அவதூறு பரப்புவது, புகைப்படங்களை தவறாக சித்தரிப்பது, ஆபாசமான விஷயங்களை அனுப்புவது போலீ சுயவிவரம் தருவது போன்ற அவலங்கள் அதிகம் நடப்பது தெரியவந்துள்ளது. 

பெண்கள் மற்றும் சிறுமிகள் இதுபோன்ற அவலங்களில் நேரடியாக அவர்கள் களங்கப்படுத்தப்படுகின்றனர். இது அவர்களது மனநல நிலை வெகுவாக பாதிக்கிறது. இணைய உலகிலும் நிஜ உலகிலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டது போன்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றது. 

இதனால் பணியிடம், பள்ளி மற்றும் தலைமை பதவிகளில் பெண்களின் வெகுவாக பாதிக்கிறது. ஆன்லைன் துன்புறுத்தல் வெறுப்பூட்டும் பேச்சு புகைப்படங்களை தவறாக பயன்படுத்துதல், மிரட்டல் ஆன்லைனில் பின் தொடர்ந்து தொந்தரவு செய்தல், ஆபாசமான விஷயங்களை அனுப்புதல் மற்றும் பல விஷயங்கள் டிஜிட்டல் வன்முறையில் ஒரு பகுதியாக உள்ளது. 

செயற்கை நுண்ணறிவு மூலம் அதன் ஆபத்துகள் இன்னும் அதிகரித்துள்ளன. பெரும்பாலும் பெண்கள் இது போன்ற டிஜிட்டல் வன்முறைகளில் அதிகம் சிக்கி வருகிறார்கள். அவர்களை பொறுத்தவரை டிஜிட்டல் உலகம் என்பது அவர்கள் அதிக நேரத்தை செலவிடும் ஒன்றாக உள்ளது.

 அங்கு அவர்கள் துன்புறுத்தல் கொடுமைப்படுத்தப்படுதல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இது அவர்களை வேறு ஒரு நிலைக்கு தள்ளி விடுகிறது. ஒரு கட்டத்தில் யாரிடமும் உதவி கேட்பது, என்ன செய்வது என்ற குழப்பமும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த டிஜிட்டல் உலகில் இருந்து வெளியேறினால் அவர்கள் தம் நட்பு வட்டத்திலிருந்து துண்டிக்கப்படுவதாக நினைக்கிறார்கள். 

இது அவர்களை மேலும் சிக்கலில் தள்ளுகிறது. ஐநாவின் கூற்றுப்படி பாலின சமத்துவம் இன்மை பாலின பாகுபாடு ஆகியவற்றில் வேரூன்றிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் செய்யப்படும் வன்முறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் அல்லது தகவல் தொழில் தொடர்பு நுட்பத்தை பயன்படுத்தி நிகழ்த்தப்படும் அல்லது விளம்பரப்படுத்தப்படும் வன்முறை இந்த வகையின் கீழ் வருகிறது.

 அனாதிக்க சமூகத்தில் வெளியுலகில் காணும் சக்தி இணையதளத்திலும் காணப்படுவதே டிஜிட்டல் வன்முறைகளுக்கு முக்கிய காரணம். எனவே பாலின சமத்துவம் ஆணாதிக்க ஆணவம் இல்லாத மனமாற்றமும் தான் இது போன்ற வன்முறைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் இதை ஒவ்வொரு தனி மனிதரும் உணர வேண்டும்.
 
மேலும் இது போன்ற வழக்குகளில் காவல்துறையினர் அதிகபட்ச உணர் திறனுடன் செயல்பட வேண்டும். பாலியல் வன்புணர்வு அல்லது கொலை நடந்தால் மட்டுமே அவர்கள்  விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று இல்லை. அவர்கள் அதற்கு தூண்டும் சிறிய தீப்பொறிகளை தொடக்க நிலையிலேயே கில்லி எறிய அதையும் அந்த குற்றங்களுக்கு நிகரான தீவிரத்துடன் அணுக வேண்டும் இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget