மேலும் அறிய
Advertisement
பட்டியல் இன பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த அவலம் - மாமியார், மருமகள் கைது
கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுக்கிறீர்களே இது நியாயமா? நீங்கள் மட்டும் சில்வர் டம்ளரில் தேநீர் குடிக்கிறீர்கள் அவர்களுக்கு பேப்பர் கப் வாங்கி வந்து தேநீர் கொடுத்திருக்கலாமே எனக் கேட்டுள்ளார்.
மொரப்பூர் அருகே கூலி வேலைக்காக சென்ற பட்டியல் இன வகுப்பை சேர்ந்த வயது முதிர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேனீர் கொடுத்த விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாமியார், மருமகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டி அடுத்த போளையம்பள்ளி கிராமத்தில் இருந்து ஐந்து பட்டியல் இன வகுப்பைச் சார்ந்த வயது முதிர்ந்த பெண்கள் மாரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள புவனேஸ்வரன் என்பவரது விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். காலையில் சென்று விவசாய நிலத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இந்த கூலி ஆட்களுடன் புவனேஸ்வரனின் தாய் சின்ன தாயும் வேலை செய்து வந்துள்ளார். தொடர்ந்து கூலி ஆட்களுக்கு புவனேஸ்வரனின் மனைவி தாரணி தேநீர் கொண்டு வந்துள்ளார். அப்போது வேலை செய்த பட்டியல் சமூக பெண்களுக்கு, கொட்டாங்குச்சியில் தேனீர் கொடுத்துள்ளனர். மேலும், தோட்டத்தின் உரிமையாளருக்கு மட்டும் சில்வர் டம்ளரில் தேனீர் கொடுத்துள்ளனர். அப்பொழுது அந்த வழியாக சென்ற பட்டியல் சமூக இளைஞர் ஒருவர், கூலி வேலை செய்யும் பட்டியல் சமூக பெண்கள் கொட்டாங்குச்சியில் தேநீர் அருந்துவதை கவனித்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரம் இருந்த அந்த இளைஞர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டு புவனேஸ்வரனின் தாய் சின்ன தாயிடம், கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுக்கிறீர்களே இது நியாயமா? நீங்கள் மட்டும் சில்வர் டம்ளரில் தேநீர் குடிக்கிறீர்கள் அவர்களுக்கு பேப்பர் கப் வாங்கி வந்து தேநீர் கொடுத்திருக்கலாமே எனக் கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர் வயது முதிர்ந்த பெண்கள் கொட்டாங்குச்சியில் தேநீர் அருந்தும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. தொடர்ந்து கூலி வேலைக்குச் சென்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 5 பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்து அவமானப்படுத்தியது குறித்து, பாதிக்கப்பட்ட செல்வி, (50) என்ற பெண், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், தலைமையில், காவல் துறையினர் தேனீர் கொடுத்த தரணி, மாமியார் சின்னதாயி ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பட்டியல் சமூக வயது முதிர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்து அவமானப்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை முடிந்த பிறகு தரணி, மற்றும் சின்னத்தாய், மீது எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 - ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது சேலம் மத்திய சிறையில் அடித்தனர்.
விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு சென்ற பட்டியல் சமூக வயது முதிர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion