24 மணி நேரத்தில் 400 கி.மீ... போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக சமூக ஆர்வலர் தொடங்கிய பயணம்
தருமபுரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுக்காக 24 மணி நேரத்தில் 400 கிலோமீட்டர் தூரம் பைக்கில் இருசக்கர வாகனத்தில் பயணம் தொடங்கிய சமூக ஆர்வலர்.
தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில், சாலை போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது, தலைக்கவசம் அணிவது, சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது, போதைப் பொருளுக்கு எதிராகவும் போதைப் பொருள் பயன்படுத்துவதால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில், மாவட்ட காவல் துறையினருடன் இணைந்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள், தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பலர் போதை பொருளுக்கு எதிராகவும், அதை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விராத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பொது மக்களிடையே போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்றும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தருமபுரி மாவட்டம் மாட்லாம்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் வழக்கறிஞர் சுபாஷ், தனியொருவராக ஒரு நாளில், 24 மணி நேரத்தில் 400 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை தருமபுரி நான்கு ரோடு அதியமான் ஔவையார் சிலை அருகில் இருந்து தொடங்கினார். இந்த பயணத்தை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சதீஷ்குமார் மற்றும் ரகுநாதன் ஆகியோர் குடியசைத்து விழிப்புணர்வு பயணத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த விழிப்புணர்வு பயணத்தில் போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிராத கடலுக்கு எதிரான சர்வதேச தினத்தை ஒட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 24 மணி நேரத்தில் தருமபுரி மாவட்டம் முழுவதும் 400 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்தப் பயணத்தின்போது பொதுமக்களை சந்தித்து போதை பொருளை பயன்படுத்துவதற்கு எதிரான பிரச்சாரம் செய்து, துண்டறிக்கைகள் வழங்கியும், போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உடலுக்கு ஏற்படும் கேடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
மேலும் இந்த சமூக ஆர்வலர் சுபாஷ் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது, போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அவ்வப்போது காவல் துறையினரிடம் பல்வேறு வழிமுறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று மாவட்ட முழுவதும் 24 மணி நேரத்தில் 400 கிலோ மீட்டர் தூரம் பயணத்தை மேற்கொண்டு இருசக்கர விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.