மேலும் அறிய
Advertisement
தருமபுரியில் ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.11 லட்சம் பறிமுதல்
இந்த சோதனையின்போது, தொப்பூர்-தருமபுரி வந்த ஜீப் ஒன்றில் ரூ.11 லட்சத்து 58 ஆயிரத்து 50 இருப்பது தெரிய வந்தது.
தருமபுரியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி ஜீப்பில் எடுத்து வரப்பட்ட ரூ.11.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கட்சி அரசியல் கட்சி கொடிகள் விளம்பர பதாகைகள் சின்னங்கள் போன்றவர்களை நிர்வாகம் சார்பில் அகற்றி வருகின்றனர். அதேப்போல் மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் ரூ.50 ஆயிரத்தும் மேற்பட்ட தொகைகளை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 16-ம் தேதி முதல் தருமபுரி மாவட்டத்தில் தொடர் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டம் முழுக்க 10 சோதனைச் சாவடிகள், 45 பறக்கும் படைக் குழுக்கள், 45 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இன்று நல்லம்பள்ளி அடுத்த சேசம்பட்டி கூட்டு ரோடு அருகே, ஜெயக்குமார், காவல் துறையினர் செல்வபதி, சுவீந்திரன் ஆகியோ கொண்ட குழு வாகன சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, தொப்பூர்-தருமபுரி வந்த ஜீப் ஒன்றில் ரூ.11 லட்சத்து 58 ஆயிரத்து 50 இருப்பது தெரிய வந்தது. இந்த விசாரணையில், அது தனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான பணம், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதால் தருமபுரி மாவட்டம் லளிகம் பகுதியைச் சேர்ந்த ஊழியர் மோகன் என்பவரிடம் இருந்து பறக்கும் படை குழுவினர் தொகையை கைப்பற்றினர்.
அதேபோல, தொப்பூர் சோதனைச் சாவடி பகுதியில் நடந்த வாகன சோதனையின்போது, அவ்வழியே காரில் வந்த சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரிடம் ஆவணங்கள் இல்லாமல் ரூ.69 ஆயிரத்து 740 பணம் இருந்தது. எனவே, அதை பறக்கும் படையினர் கைப்பற்றினர். இந்த இரண்டு இடங்களிலும் கைப்பற்றப்பட்ட பணத்தை, தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காயத்ரி மற்றும் ஜெயச்செல்வனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12.27 லட்சம் பணம் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், தருமபுரி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பணம் எடுத்து வந்த வாகனம் விடுவிக்கப்பட்டது. மேலும் இந்த தனியார் நிதி நிறுவனம் உரிய ஆவணங்களை வருமான வரித்துறையில் ஒப்படைத்து தங்களது பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion