தருமபுரி நகரில் நள்ளிரவில் பர்னிச்சர் கடைக்குள் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
தருமபுரி நகரில் நள்ளிரவில் பர்னிச்சர் கடைக்குள் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து:அருகில் உள்ள வங்கி நகைக்கடை உள்ளிட்ட மூன்று கடைகளுக்கு பரவியது
தருமபுரி நகரில், சேலம் செல்லும் பிரதான நேதாஜி பைபாஸ் சாலையில், கணேசா சினிமா தியேட்டர் இருந்த இடத்தில் மனோகரன் என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிய வருகின்றனர். நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பத்து மணிக்கு விற்பனை முடிந்து கடையை பூட்டிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் தீப்பிடித்து உள்ளது. கடைக்குள் இருந்து கூட வந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையிருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் தீ நல்ல பரவி கடை முழுவதும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது.
மேலும் பர்னிச்சர் கடைக்குள் பற்றி எரிந்து தீயானது, அருகே அருகே உள்ள இரண்டு வங்கிகள், தனியார் ஸ்கேன் சென்டர், வெள்ளி நகை கடை, ஆகியவற்றுக்குள்ளும் பரவி தீ பற்றியது. மேலும் தீ அதிகமாக பரவத் தொடங்கியதால், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்களிலும், நகாராட்சி வாகனங்கள் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கு முயற்சியில், நான்கு தீயணைப்பு நிலைய தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் சிறியதாக பற்ற தொடங்கிய தீ கட்டுக்கடங்காமல், சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக எரிந்து வருகிறது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மேலும் தீப்பற்றி எரிந்து வரும் பர்னிச்சர் கடைக்கு பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகிறது. அங்கிருந்து குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதோப்போல் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் தீ ஒருபுறம், அதிலிருந்து வெளியேறும் கரும்புகையானது தருமபுரி பேருந்து நிலையம் வரை சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவு தூரத்திற்கு பரவியதால் மூச்சு திணறல் ஏற்பட்டது.
மேலும் தருமபுரியிலிருந்து சேலத்திற்கும், சேலத்திலிருந்து தருமபுரி நகருக்குள் வரும் வாகனங்களை காவல் துறையினர் மாற்று வழியாக திருப்பிவிடப்பட்டனர். மேலும் விடிய விடிய கட்டுங்காமல் தீ மேலும் மேலும் பரவி பற்றி எரிந்து வருகிறது.
இந்த தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தீ நன்றாக பரவியதால், கடை முழுவதும் எரிந்து பொருட்கள் சாம்பலாகி வருகிறது. ஆனால் இந்த தீ விபத்தில் இதுவரை நல்வாய்ப்பாக எந்தவித உயிர்ச்சேதமா, காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கும் இடத்திலிருந்த இரண்டு மின்சார டிரான்ஸ்பர்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த தீபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளான பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தருமபுரி நகரில் இரவில் திடீரென பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.