மேலும் அறிய
Advertisement
பட்டியலின மாணவி மீது தாக்குதல்; திமுக அரசை கண்டித்து தருமபுரியில் அதிமுக ஆர்ப்பாட்டம்
பல்வேறு திட்டங்கள் தற்பொழுது திமுக அரசால் புறக்கணிப்பு செய்யப்பட்டு உள்ளதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினரின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் வேலை செய்த பட்டியலின பனிப்பெண்ணை துன்புறுத்தி சித்தரவதை செய்ததாக பெண் காவல் துறையிடம் புகார் தெரிவித்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பணிப் பெண்ணை சித்ரவதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் ஒளித்து வந்தது. இதனைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் செயலை கண்டித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக தலைமை அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் தொலை தொடர்பு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பணிப் பெண்ண துன்புறுத்தி சித்ரவதை செய்த பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன், மருமகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்து அவதூறாக பேசி வருவதற்கு அதிமுக சார்பில் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
இந்த ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், “தமிழகத்தில் தற்பொழுது சட்டம் - ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருகின்றது. மேலும் தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் பட்டியலின மாணவி மீது கடுமையாக தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் மற்றும் மருமகள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தற்பொழுது திமுக அரசால் புறக்கணிப்பு செய்யப்பட்டு உள்ளதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கையில் பதாதைகள் ஏந்தியும், கண்டன கோஷங்கள் எழுப்பியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் சுமார 500 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion