மேலும் அறிய

கைவிட்ட கோடை மழை; காவிரி ஆற்றில் சரிந்த நீர்வரத்து - ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1500 கன அடியில் இருந்து 1000 கன அடியாக குறைந்தது. சுற்றுலா பயணிகள், சுற்றுலா தொழிலாளர்கள் ஏமாற்றம்.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1500 கன அடியில் இருந்து 1000 கன அடியாக குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கடந்தாண்டு பருவமழை பொய்த்துப் போனதால், கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் அணைகள் முழுவதுமாக நிரம்பாததால், தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படுகின்ற தண்ணீர் குறைவாகவே திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் முற்றிலுமாக தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படுகின்ற தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்படுகின்ற தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு வந்ததால், கடந்த நான்கு மாதங்களாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து, வினாடிக்கு 200 கன அடியாக இருந்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீர்வரத்து முற்றிலுமாக இல்லாமல், காவிரி ஆறு வறண்ட பாறைகளாக காட்சியளித்து வந்தது. மேலும் ஒகேனக்கல் ஐந்தருவிகளில் தண்ணீர் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கர்நாடக மாநில குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்பொழுது திடீரென வினாடிக்கு எட்டாயிரம் கன அடி வரை நீர்வரத்து உயர்ந்தது. ஆனால் குடிநீர் தேவை முடிந்த பின் காவிரியில் நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றி வெறும் பாறைகளாகவே காட்சி அளித்து வந்தது. இதனால் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலுமாகவே குறைந்தது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பொழிய தொடங்கியது. மேலும் இந்த கோடை மழை மூன்று நாட்கள் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, தளி, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் கடந்த நான்கு மாதமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 200 கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 1500 கன அடி வரை உயர்ந்தது.

தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வந்ததால், காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காவிரி நெய் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைநாதுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் கோடை மழையால் நீர்வரத்து அதிகரித்து, கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது மூன்று நாட்களாக கோடை மழை பொழியாததால், காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ளதால், விவசாயிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget