மேலும் அறிய
தொடங்கப்படாத பணிகள்.. “சஸ்பெண்ட் செய்துவிடுவேன்” - ஆய்வின்போது செயல் அலுவலர்களை எச்சரித்த கலெக்டர்
"உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்” திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு- சிறுவர் பூங்கா பணி தொடங்காத, பராமரிப்பு இல்லாத, பேரூராட்சி செயல் அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்வதாக எச்சரிக்கை.
மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாக இருந்து வரும் மாவட்ட ஆட்சியர்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஒரு கிராமத்தில் தங்கி இருந்து கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து திட்டங்களும் சேவைகளும் தங்கு தடை இன்றி மக்களிடையே சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில், இன்று இந்த திட்டம் நடைபெறுகிறது. இதில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் அனைத்து துறையை சேர்ந்த மாவட்ட அதிகாரிகள் 33 பேர், அனைத்து அரசு அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சி, பேரூராட்சி, வருவாய் துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள், அரசு பள்ளிகள், கல்லூரிகள் காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை மனுக்களை நேரடியாக பெற்றனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, கடத்தூர் பேரூராட்சியில் உள்ள புதுரெட்டியூர் கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்படும் பணியினை ஆய்வு செய்தார். அப்பொழுது கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இந்த பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் பணிகள் இதுவரை தொடங்கப்படாமல், காலி இடமாகவே இருந்தது. இதனை கண்ட ஆட்சியர் சாந்தி, செயல் அலுவலர் விஜயசங்கரிடம் ஏன் பணி தொடங்கப்படவில்லை என கேட்டறிந்தார். தேர்தல் அறிவிப்பு வந்தால், பணிகள் தொடங்க முடியாது, நாளையே உடனடியாக பணிகள் தொடங்கப்பட வேண்டும் என எச்சரித்ததோடு, தொடங்கப்படவில்லை எனில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும் சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என கடுமையாக எச்சரித்தார்.
இதனை தொடர்ந்து சுங்கரஹள்ளியில் ஆய்வு செய்தபோது, பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு எவ்வித வசதியும் இல்லை என தெரிவித்தனர். ஏன் தண்ணீர் வசதி செய்தி தரவில்லை. ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் ரூ. 28 லட்சம் மதிப்பில் 1வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவினை பார்வையிட்ட போது பராமரிப்பு இன்றி புற்கள் சூழ்ந்து இருந்தது. இதனையடுத்து முறையாக பராமரித்து சிறுவர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என ஆட்சியர் சாந்தி பேரூராட்சி அலுவலருக்கு எச்சரித்தார் .
போதக்காடு அரசு பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் கி.சாந்தி, பள்ளியின் ஆசிரியர் பாரதி தனிப்பட்ட முறையில் பள்ளியில் பல்வேறு பணிகளை செய்துள்ளதை கண்டு நெகிழ்ந்து பாராட்டினார். மேலும் சுற்று சுவரில் வரைந்துள்ள ஓவியங்களை போன்று, மாவட்டம் உள்ள பள்ளிகளில் ஓவியங்கள் வரைய வேண்டும் எனவும், கல்வி துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தருமபுரி மாவட்டம், மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரி மாவட்டமாக இருக்க, போதக்காடு அரசு பள்ளி போன்று மற்ற பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஏராளமான அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion