ஒரு லிட்டர் கேன் தண்ணீரில் சுமார் 2.5 லட்சம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
உணவுப் பொருட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் சேருவதை தடுக்க கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்தலாம். அதே போல் பிற உபயோகங்களுக்கு சணல் அல்லது துணி பைகளை பயன்படுத்தலாம்.
உணவும் நீரும் அனைத்து உயிரினங்களுக்குமான அதிசயமான தேவைகளில் ஒன்று. உணவு உட்கொள்ள முடியாத நேரத்தில் நீரை அருந்தி பசியின் வீரியத்தை குறைத்துக் கொள்ளும் சக மனிதர்களும் நம்மிடையே இருக்கின்றனர். இந்த குடிநீரை பல இடங்களில் பல்வேறு நிலைகளில் நாம் அருந்துகிறோம். உதாரணமாக நாம் பயணம் செய்யும்போது அல்லது சுத்தமான தண்ணீரை கிடைக்காத இடத்தில் இருக்கும்போதெல்லாம் பாட்டில் தண்ணீரை அங்கேயே வாங்க முயற்சிக்கிறோம்.
அந்த தண்ணீரில் அழுக்கு இருக்காது என்று நம்புகிறோம். ஆனால் அந்த தண்ணீருக்குள் நுண்ணிய பிளாஸ்டிக் அதாவது பிளாஸ்டிக்கின் எண்ணற்ற நுண்ணிய துகள்கள் இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர் ஆராய்ச்சியாளர்கள்.
அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பாட்டில் தண்ணீரில் முன்னர் மதிப்பிட்டதை விட 100 மடங்கு அதிகமான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.
ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 2.5 லட்சம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இங்கே மைக்ரோ பிளாஸ்டிக் என்றால் என்ன என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் இருக்கும் இடத்தை சுற்றிப் பார்த்தால் பல பிளாஸ்டிக் பொருட்கள் தெரியும் அத்தகைய பொருட்களை நுண்ணிய துண்டுகளாக மிக சிறிய அளவில் வெட்டினால் அதுவே மைக்ரோ பிளாஸ்டிக் என அழைக்கப்படுகின்றது. பொதுவாக 5 மில்லி மீட்டருக்கும் குறைவாக அளவில் உள்ள பிளாஸ்டிக் துண்டுகள் மைக்ரோ பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுகின்றன.
அதைவிட சிறியதாக இருக்கும் பிளாஸ்டிக்கை நானும் அளவில் மட்டுமே அளவிட முடியும் அவை நானோ பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு வகைகளும் கண்ணுக்கு எளிதில் புலப்படுவதில்லை. ஆனால் அவை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளன. அது ஆறுகளின் நீராகவோ கடலின் அடிப்பகுதியாகவோ அல்லது உறைந்த பணியாகவோ இருக்கலாம். ஐஐடி பாட்னா நடத்திய ஆய்வில் மழை நீரிலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகள் கூட மைக்ரோ பிளாஸ்டிக் காணப்படுவதாக மற்றொரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் அழுக்கு நீர் நகர்புறங்களில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகள் என பல காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது .
நீரில் இது போன்ற பிளாஸ்டிக் கலப்பு என்பது பல்வேறு அபாயங்களை வழி வகுத்து விடும் என்கின்றனர். ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து சுற்றுச்சூழல் மேம்பாட்டு சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது 2019 -ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் ஒரு மதிப்பாய்வை நடத்தியது.
அதில் மைக்ரோ பிளாஸ்டிக் மனித உடலில் நுழைந்தால் என்ன ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதை புரிந்து கொள்ள முயற்சித்தது. ஆனால் வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சி காரணமாக உலக சுகாதார மையம் எந்த முடிவுக்கும் வரவில்லை.
அதே நேரத்தில் பிளாஸ்டிக் மாசு கட்டுப்பாட்டை பெருமளவில் குறைக்க வேண்டும் என்று மட்டும் வேண்டுகோள் விடுத்தது ஆனால் தற்போது மைக்ரோ பிளாஸ்டிக் இன் ஆபத்துகள் குறித்து வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அது நமது நாளமில்லா சுரபிகள், ஹார்மோன் உற்பத்தி செய்யும் சுரப்பிகள் செயல்பாட்டில் சிக்கல்கள் ஏற்படுகிறது. மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ள நீரை தொடர்ந்து உபயோகிப்பதால் மிகவும் கடுமையான உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்ணீரை தவிர மைக்ரோ பிளாஸ்டிக் செய்யும் நிலத்திலும் ஏராளமாக காணப்படுகின்றன. பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தப்படும் சாக்கடை கழிவுகள் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்ததால் பல்லாயிரம் ஏக்கரில் விவசாய நிலம் மாசுபடும் அவை ஒருபோதும் மக்காது அதாவது அதே நிலையில் இருக்கும் இது போன்ற பல்வேறு காரணங்களால் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களின் பயன்பாட்டை குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது கடந்த 2002-ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
மேலும் உற்பத்தியில் இறக்குமதி சேமிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் ஏற்கனவே இது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன ஆனாலும் மக்கள் வீட்டில் தட்டுகள் மற்றும் பலகைகளில் கூட பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்
இதையெல்லாம் கடைபிடிக்கணும்
உணவுப் பொருட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் சேருவதை தடுக்க கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்தலாம். அதே போல் பிற உபயோகங்களுக்கு சணல் அல்லது துணி பைகளை பயன்படுத்தலாம். துணிகளை வாங்கும் போது கூட செயற்கை இலை ஆடைகளை ஆடைகளுக்கு பதிலாக பருத்தி ஆடைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.
பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ண ஓட்டம் எப்போதும் வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது நம் முயற்சிகளில் முக்கியத்துவம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் அறிவுரைகள்.