மேலும் அறிய

ஈரமாக இருப்பதாக சொல்கிறார்கள்.. ஓரம் தள்ளப்படும் நெல் மூட்டைகள்... கவலையில் விவசாயிகள்!

ஈரப்பதத்தின் சதவீதத்தை 24 சதவீதமாக உயர்த்தி அனைத்து விவசாயிகளின் நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் இல்லையென்றால் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

ஈரப்பதத்தை கணக்கு காண்பித்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்
 
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன் காரணத்தினால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 4.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் நிகழாண்டில் 1.37 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்து தற்போது அறுவடை பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் சாய்ந்து வருகின்றன இதனை கண்டு விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

ஈரமாக இருப்பதாக சொல்கிறார்கள்.. ஓரம் தள்ளப்படும் நெல் மூட்டைகள்... கவலையில் விவசாயிகள்!
இந்த நிலையில் விவசாயிகள் தங்களது வயல்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைத்து பின்னர் அறுவடை இயந்திரம் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் மூலம் தங்களது நெல் பயிரை அறுவடை செய்து வெயில் அடிக்கும் நேரத்தில் சாலையில் கொட்டி காயவைத்து பின்னர் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு செல்கின்றனர். ஆனால் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை ஈரப்பதத்தின் அளவை காண்பித்து கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு 17 சதவிகிதம் ஈரப்பதமுள்ள நெல்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 10 தினங்களாக பெய்துவரும் மழையின் காரணமாக அறுவடை செய்யும்பொழுது நெல் மணிகளில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது.

ஈரமாக இருப்பதாக சொல்கிறார்கள்.. ஓரம் தள்ளப்படும் நெல் மூட்டைகள்... கவலையில் விவசாயிகள்!
இதன்காரணமாக நெல்மணிகளை காயவைத்து அதன் பின்னரே கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றாலும் 20 சதவீதத்தில் இருந்து 22 சதவீதம் வரை நெல்மணிகளில் ஈரப்பதம் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக கடந்த காலங்களில் விவசாயிகளின் நிலையை புரிந்து கொண்டு ஈரப்பதத்தின் அளவை உயர்த்தி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதே போன்று இந்த ஆண்டும் ஈரப்பதத்தின் சதவீதத்தை 24 சதவீதமாக உயர்த்தி அனைத்து விவசாயிகளின் நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் இல்லையென்றால் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இதனால் அடுத்தகட்ட சாகுபடி பணிகளை தொடங்க முடியாத நிலை உருவாகும் ஏற்கனவே கடன் பெற்று சாகுபடி செய்த நிலையில் செய்த செலவுத் தொகையைக் கூட எடுக்க முடியாத நிலை உருவாகும். ஆகையால் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நெல்லின் ஈரப்பதம் சதவீதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
தலைப்பு செய்திகள்

"வேடிக்கை பாத்தவருக்கு தாமரைப்பட்டயமா.." இந்தியன் பட காட்சியால் மு.க.ஸ்டாலினை சீண்டும் தவெக!
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழக்கிழமை (10.09.2026) எந்தெந்த பகுதிகள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழக்கிழமை (10.09.2026) எந்தெந்த பகுதிகள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
வாக்குறுதியை மீறிய தனியார் நிறுவனம்! - மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் எழும் கூலித்திருட்டு குற்றச்சாட்டு!
வாக்குறுதியை மீறிய தனியார் நிறுவனம்! - மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் எழும் கூலித்திருட்டு குற்றச்சாட்டு!
சிலம்பம் சுற்றியபோது தடுமாறி தலைகுப்புற கீழே விழுந்த எம்.பி. சுதா.. பதறிய அதிகாரிகள்... அடுத்த வினாடியே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
சிலம்பம் சுற்றியபோது தடுமாறி தலைகுப்புற கீழே விழுந்த எம்.பி. சுதா.. பதறிய அதிகாரிகள்... அடுத்த வினாடியே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Protest: ”ஸ்டாலினை கொச்சைப்படுத்தி, ஏமாற்றி ஆட்சியை பிடித்த மைனாரிட்டி CM விஜய்” - திமுக கண்டன ஆர்பாட்டம்
”ஸ்டாலினை கொச்சைப்படுத்தி, ஏமாற்றி ஆட்சியை பிடித்த மைனாரிட்டி CM விஜய்” - திமுக கண்டன ஆர்பாட்டம்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.! யார் இந்த பரந்தாமன், சுகன்யா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.! யார் இந்த பரந்தாமன், சுகன்யா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
SP Velumani vs EPS : தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
Dharapuram: தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழக்கிழமை (10.09.2026) எந்தெந்த பகுதிகள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழக்கிழமை (10.09.2026) எந்தெந்த பகுதிகள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
Embed widget