மேலும் அறிய
Advertisement
தேர்தலில் வாக்களிக்க விரும்பாத கொரோனா நோயாளிகள்
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில், கொரோனா நோயாளிகள் வாக்களிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், பிரபலங்கள், தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தினர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒருமணி நேரம் மட்டும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம்.
இந்நிலையில், சென்னையில் சிகிச்சை பெற்று வரும் 8 ஆயிரத்து 991 கொரோனா நோயாளிகளில் 17 பேர் மட்டுமே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 94 பேர் வாக்களிக்க விரும்பவில்லை என்று சுகாதார துறையிடம் கூறியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion