Watch Video: காலை கவ்விய சிறுத்தை! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வனத்துறையினர்..! வைரல் வீடியோ
சிறுத்தயை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. வனத்துறையினர் பிரேம் குமார், ராஜேந்திரன் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை கடந்த சில நாட்களாக பிடிபடாமல் சுற்றி வந்தது. 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்த வனத்துறையினர், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் நேற்று பிடித்தனர்.
முன்னதாக, கவச உடை அணிந்தபடி சோளக் காட்டிற்குள் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை, பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர்களை தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். இதனால் சிறுத்தை தாக்குதலில் காயமடைந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. அதனை அடுத்து, முட் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு மருத்துவர் விஜயராகவன் மயக்க ஊசி செலுத்தினார். இதையடுத்து வனத்துறையினர் வலைவீசி சிறுத்தையை நேற்று பிடித்தனர்.
The #leopard which strayed into Tiruppur town has just been darted & sedated. Action is being taken for measuring the necessary body and health parameters and samples for DNA.
— Office of the Chief Wildlife Warden Tamil Nadu (@CWLWTN) January 27, 2022
We are deciding the place of release of the leopard shortly after all necessary medical examinations. pic.twitter.com/GnYx0iNkRU
சிறுத்தை பிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் சிறுத்தையை, ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். கடந்த வாரம் கோவை குனியமுத்தூர் பகுதியில் குடோனில் பதுங்கியிருந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு, டாப் சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வீடியோவைக் காண:
Hats off to the brave forest personnel. Needs tremendous courage and commitment to work risking their lives for the larger cause of safety of public👏 https://t.co/mnAc4hSVn6
— Geethanjali K IFS (@Geethanjali_IFS) January 27, 2022
சிறுத்தயை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. வனத்துறையினர் பிரேம் குமார், ராஜேந்திரன் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.எஃப்.எஸ் அதிகாரி கீதாஞ்சலி, “இது போன்ற சவாலான பணியில் ஈடுபடுவதற்கு அளவற்ற தைரியமும், தன்னம்பிக்கையும் வேண்டும். பொது மக்களின் பாதுகாப்பிற்காக தங்களது உயிரை பணயம் வைக்கும் வனத்துறையினருக்கு பாராட்டுகள்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்