மேலும் அறிய

’திமுக, பாஜக ஐடி விங் பொய் பரப்புரை செய்கிறார்கள்’ - எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

”திமுக, பாஜக ஐடி விங் பொய் பரப்புரை செய்கிறார்கள். பொய் பரப்புரைகளுக்கு பதிலடி தரும் வகையில் அதிமுக ஐடி விங் செயல்பாடுகள் கண்டிப்பாக இருக்கும்”

கோவை குளத்துப்பாளையம் பகுதியில் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “ஐடி விங் நமக்கு மிகவும் முக்கியம். ஒரு பூத்திற்கு இரண்டு பேரை போட்டுள்ளோம். எம்ஜிஆர் காலத்தில் டிவியே கிடையாது. ஜெயலலிதா காலத்தில் நிறைய டிவிக்கள் வந்து விட்டது. 1996 ல் ஜெயலலிதா ஆட்சி போக காரணம் டிவிக்கள் தான். திமுக போன்ற பல்வேறு கட்சிகளில் ஐடி விங்க் ஆட்கள் குறைவாக உள்ளனர். நம் ஐடி விங்க் வலிமையாக உள்ளது. திமுகவின் மக்கள் விரோத ஆட்சி மக்களிடம் போய் சேர வேண்டும். உங்களது பணி சிறப்பாக இருக்க வேண்டும்.

ஒரு கோடி ஓட்டை உங்களால்தான் மாற்ற முடியும். நமது பிரதான நோக்கம் நடுநிலை வாக்காளர்களை ஈர்க்க வேண்டும். நமக்கு வாக்கு அளிக்க வேண்டும். எங்களை புகழ்ந்து போடுவது உங்கள் பணி அல்ல. திமுக தவறை பதிவாக போட வேண்டும். நமது சாதனைகளை போட வேண்டும். சட்டமன்ற தேர்தலில் அதிமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும். நமக்கு தான் எதிர்காலம் உள்ளது. மற்ற கட்சிகளுக்கு சென்றால் எதிர்காலம் இல்லை. திமுக, பாஜக எதிராக எடுத்து பேச வேண்டும். நடுநிலை வாக்காளர்கள் பார்க்கும் வகையில் பதிவுகளை போட வேண்டும். தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். நாகரிகமாக கருத்துகளை போட வேண்டும். சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. கருத்து கணிப்பு என கருத்து திணிப்பு செய்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம்” எனத் தெரிவித்தார்.


’திமுக, பாஜக ஐடி விங் பொய் பரப்புரை செய்கிறார்கள்’ - எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, “தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் ஐடி விங்க் நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெரிய கட்சியாக, உலகத்தில் ஏழாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதிகமான ஐடி விங்க் உறுப்பினர்கள் அதிமுகவில் தான் இருக்கிறார்கள். ஐடி விங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. திமுக, பாஜக ஐடி விங்க் பொய் பரப்புரை செய்கிறார்கள். மற்ற ஐடி விங்க் ஒருவர் இருந்து கொண்டு, இருபது பேர் இருப்பது போல போடுவார்கள். அதிமுக ஐடி விங்க் சரியான தகவல்களை போடுவார்கள். ஆபாசமாக போடமாட்டார்கள். பொய்யான தகவல்களை பரப்ப மாட்டார்கள். மற்றவர்கள் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். பொய் பரப்புரைகளுக்கு பதிலடி தரும் வகையில் அதிமுக ஐடி விங்க் செயல்பாடுகள் கண்டிப்பாக இருக்கும்.

தற்போது எல்லோரும் போன் வைத்திருக்கிறார்கள். ஒரு கோடிக்கும் வாக்குகளை கவரும் வாய்ப்பை அதிமுக ஐடி விங்க் உருவாக்கும். விளவங்கோடு தேர்தலில் போட்டியிடுவது குறித்து எடப்பாடியார் முடிவு செய்வார். தேமுதிக உடனான கூட்டணிக்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். எடப்பாடி பழனிசாமி உத்தரவுபடி அவர்களை பார்த்தோம். அதிமுகவில் கூட்டணி குறித்து பேச குழு அமைக்கப்பட்டுள்ளது. தேமுதிக குழு அமைக்க உள்ளது. இரண்டு குழுவும் சேர்ந்து பேசி முடிவு செய்வார்கள். மற்றது எல்லாம் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். எந்த கட்சியிலும் கூட்டணி முடியவில்லை. திமுகவில் காங்கிரஸ் கூட்டணி முடிந்து விட்டதா? எல்லா கட்சியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கவில்லை. கருத்து கணிப்புகள் என்பது சரியானது அல்ல. கருத்து திணிப்பு செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் பெரிய இயக்கம். திமுக எந்த திட்டமும் தரவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பொதுமக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget