மேலும் அறிய

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் ; உள்ளூர் விடுமுறை அளிக்க வானதி சீனிவாசன் கோரிக்கை

”கோவை மாநகரின் 'காவல் தெய்வம்' என்றழைக்கப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், கோவை மாநகரின் மையப் பகுதியான டவுன்ஹால், மணிக்கூண்டு அருகே அமைந்துள்ளது.”

கோவை அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் மாசி தேரோட்டத்தின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். 

பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”கோவை மாநகரின் 'காவல் தெய்வம்' என்றழைக்கப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், கோவை மாநகரின் மையப் பகுதியான டவுன்ஹால், மணிக்கூண்டு அருகே அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இத்திருக்கோயில், கோவை மாநகர மக்களின் உணர்வுகளோடு கலந்து விட்ட திருக்கோயில். கோவை மாநகரமே இத்திருக்கோயிலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருள்மிகு கோனியம்மனை தரிசிக்க வந்து செல்கின்றனர்.

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் நடைபெறும் திருத்தேரோட்டம், மிகமிக முக்கியமான திருவிழா. லட்சக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவுக்கு வருவார்கள். எனவே அருள்மிகு கோனியம்மன் திருத்தேரோட்டம் நடக்கும் நாளன்று கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என்று கோவை மாநகர மக்களும், அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் பக்தர்களும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை ஏற்று, அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் மாசி தேரோட்டத்தின் போது, கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கோவை கோனியம்மன் தேரோட்டம் இந்தாண்டு மார்ச் மாதம் 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த தேரோட்டத்தில் கோவை மக்கள் மட்டுமல்லாது ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி உட்பட சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டு கோனியம்மன் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்று அம்மனை வழிபடுவது வழக்கம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க
நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க
Coimbatore power cut: கோவையன்ஸ் உஷார்! நாளை (14-07-2026) பவர் கட்: உங்கள் பகுதிக்கும் உண்டா? முழு பட்டியல் உள்ளே!
கோவையன்ஸ் உஷார்! நாளை (14-07-2026) பவர் கட்: உங்கள் பகுதிக்கும் உண்டா? முழு பட்டியல் உள்ளே!
coimbatore power cut (13-07-2026): முக்கிய அறிவிப்பு: ஜூலை 13-ல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு! எந்தெந்த இடங்கள் தெரியுமா?
முக்கிய அறிவிப்பு: ஜூலை 13-ல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு! எந்தெந்த இடங்கள் தெரியுமா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget