மேலும் அறிய

அதிமுக தலைவர்கள் பாஜகவினரை கடுமையாக விமர்ச்சிக்க கூடாது - வானதி சீனிவாசன் வேண்டுகோள்

ஒரு கட்சியை அழித்து ஒரு கட்சி வளர வேண்டும் என பாஜக நினைக்காது. ஒரு கட்சியை வளர்ப்பது என்பது இன்னொரு கட்சியை அழிப்பது என பொருள் அல்ல.

கோவை வெரைட்டி ஹால் சி.எம்.சி. காலணி பகுதியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், “கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. சி.எம்.சி. காலணியில் நீண்ட நாட்கள் இருந்த தண்ணீர் பிரச்சனைக்கு போர்வெல் அமைத்து தீர்வு காணப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் தரமான சாலைகள் அமைப்பதில்லை. பணிகள் நடக்கும் இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் பணிகள் குறித்த முழுமையான விவரம் அந்த இடத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாநகராட்சி முறையாக குப்பை எடுக்காததால், குப்பை தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறி வருகிறது. இது தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவோம். அதன் பின்னரும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில், போராட்டம் நடத்துவோம். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு கட்டுப்பாடு விதிக்கிறது. இதனால் நிலம் எடுத்தும் மத்திய அரசினால் பணிகளை துவக்க முடியவில்லை. பின்தங்கிய மாநிலங்கள் கூட தமிழகத்தை முந்தி செல்கின்றன. விமான நிலைய விரிவாக்கம் செய்யாததால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இண்டி கூட்டணி மீண்டும் யுபிஏ ஆக மாறிவருகிறது.


அதிமுக தலைவர்கள் பாஜகவினரை கடுமையாக விமர்ச்சிக்க கூடாது - வானதி சீனிவாசன் வேண்டுகோள்

பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை அளித்துள்ளார். எல்லா மாநிலங்களுக்கும் முறையாக மத்திய அரசு வரி வருவாயை பகிர்ந்து அளித்து வருகிறது. தமிழகத்திற்கு நிதி குறைவாக கொடுக்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களை விட அதிக நிதி தமிழகத்திற்கு தான் தரப்படுகிறது. கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகள் தான் தமிழகத்திற்கு அதிக வருமானம் தருகிறது. அதனால் அந்த வரி வருவாயை‌ முழுமையாக கொங்கு பகுதிக்கே திருப்பி தாருங்கள் என கேட்க முடியும். உத்தரகாண்டில் தேர்தல் வாக்குறுதியான பொது சிவில் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. பொது சிவில் சட்டம் பெண்களுக்கு நீதி கிடைக்க செய்யும் சட்டம். மதபாகுபாடு இல்லாமல் பெண்களுக்கு சொத்து, திருமணம் போன்றவற்றில் நீதி கிடைக்க இந்த சட்டம் வழி வகை செய்யும். பெண்கள் பாதுகாப்பிற்கு பொது சிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும்.

ஒரு கட்சியை அழித்து ஒரு கட்சி வளர வேண்டும் என பாஜக நினைக்காது. ஒரு கட்சியை வளர்ப்பது என்பது இன்னொரு கட்சியை அழிப்பது என பொருள் அல்ல. நான் தனிப்பட்ட தாக்குதல்களை ஒத்து கொள்வதில்லை. யார் எல்லாம் கட்சியில் சேர விரும்புகிறார்களோ அவர்களை கட்சியில் சேர்க்கிறோம். எந்த வயதுக்காரராக இருந்தாலும், அவருக்கான அனுபவம், தொடர்பு ஆகியவற்றை பயன்படுத்த முடியும். ஒருவரை வயதை காரணம் காட்டி இழித்து பேச கூடாது. அதிமுக தலைவர்கள் பாஜகவினரை கடுமையாக விமர்சிக்க கூடாது. கருத்து கணிப்புகள் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்கிறது என்பதை காட்டுகின்றன. பாஜக புறக்கணிக்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்து வருகிறது. பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர விரும்பும் கட்சிகளையும், தனிநபர்களையும் கூட்டணியில் சேர்த்து கொள்வோம். பிரதமர் மோடியை எதிர்த்தவர்கள் எல்லாம், தற்போது கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். காஷ்மீர் முஸ்லீம் கட்சிகள், வடகிழக்கு மாநில கிறிஸ்தவ கட்சிகள் பாஜக கூட்டணியில் உள்ளன. கூட்டணியை முடிவு செய்ய 24 மணி நேரம் போதும். தமிழகத்தில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (17-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (17-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut (16-11-2026): கோவையில் நவம்பர் 16ஆம் தேதி எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நவம்பர் 16ஆம் தேதி எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
4 ஏக்கரில் பிரமாண்ட ரிசார்ட்! அனுமதி வழங்கியதில் மெகா முறைகேடா? பகீர் கிளப்பும் முழு பின்னணி!
4 ஏக்கரில் பிரமாண்ட ரிசார்ட்! அனுமதி வழங்கியதில் மெகா முறைகேடா? பகீர் கிளப்பும் முழு பின்னணி!
coimbatore power cut: கோவையில் நாளை (13-11-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-11-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Anbil Mahesh: ”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Viral Video:
"எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்
Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
Tamilnadu Power Cut: தமிழகத்தில் இன்று (17-11-2026) கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட பெரிய லிஸ்ட்
தமிழகத்தில் இன்று (17-11-2026) கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட பெரிய லிஸ்ட்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
Embed widget