மேலும் அறிய

'தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை' - வானதி சீனிவாசன் விளக்கம்

”உணர்ச்சிவசப்பட்டு சொல்லும் கருத்துகள் கூட்டணிக்குள் பாதிப்பை ஏற்படுத்தாது. கட்சியில் இருந்து சில நபர்கள் செல்வது சாதாரண விஷயம். இதை கூட்டணிக்குள் பலவீனமாக்கும் முயற்சியாக பார்க்க வேண்டாம்.”

கோவை சித்தாபுதூர் பகுதியில் பாஜக மகளிரணி சார்பில் 25 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான  வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கோடிக்கணக்கான சாதாரண மகளிர் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. பெண்களுக்கான அடிப்படை தேவைகள், பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்திய மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். பெண்கள் தலைமையிலான முன்னேற்றத்திற்காக மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

கோவை தெற்கு தொகுதியில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று சுயம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். சுய வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக ஆயிரம் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளித்து, தையல் இயந்திரம் வழங்க உள்ளோம். முதற்கட்டமாக இன்று 25 பெண்களுக்கு வழங்கியுள்ளோம். 12 இடங்களில் இந்த மையம் துவங்கப்பட உள்ளது. மகளிரணி சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்.

வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனையால் ஏற்பட்ட பதட்டமான சூழலால் தொழிலை தொடர முடியாத சூழல் உள்ளது. இவ்விவகாரத்தை ஆரம்பத்திலேயே தமிழக அரசு சரியாக கையாளததால் மிகப்பெரிய பூதமாக மாறியிருக்கிறது. அப்போதே புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. 2019 க்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளாட்சி தேர்தல் தவிர்த்து, வலுவாக தேர்தலை சந்தித்தது. ஆக்கபூர்வமான கூட்டணியாக செயல்படுகிறோம். ஒரு கட்சி கொள்கையை மற்றொரு கட்சி ஏற்க முடியாது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜகவில் இருந்து விலகியவர் தலைமை பற்றி சொன்ன கருத்துகளால் கட்சிக்குள் இருப்பவர்களுக்கு மன வருத்தம் உள்ளது. இதனால் உணர்ச்சிவசப்பட்டு சொல்லும் கருத்துகள் கூட்டணிக்குள் பாதிப்பை ஏற்படுத்தாது. சில எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துள்ளது. இருந்தாலும் பலமான கூட்டணியாக தேர்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும். தற்போது ஏற்பட்ட மனக்காயங்களை ஆற்றும் வாய்ப்புள்ளது. 


தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை' - வானதி சீனிவாசன் விளக்கம்

அடுத்த தேர்தலில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். கட்சியில் இருந்து சில நபர்கள் செல்வது சாதாரண விஷயம். இதை கூட்டணிக்குள் பலவீனமாக்கும் முயற்சியாக பார்க்க வேண்டாம். திமுக ஆட்சியை கவிழ்க்க மற்ற கட்சிகள் சதி செய்ய வேண்டியதில்லை. அதற்கு அவர்களே. தகுதியானவர்கள். எதிர்கட்சிகளை பார்த்து முதலமைச்சர் பயப்பட வேண்டாம். அமைச்சர்கள், குடும்பத்தை பார்த்து தான் பயப்பட வேண்டும்.

அண்ணாமலையின் தைரியமான பேச்சு, வேகமான செயல்பாடு என்னை ஈர்க்கக்கூடியது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரோடு தன்னை ஒப்பிட்டது, தலைமை பண்பை வெளிப்படுத்தும் வகையில் தான். அதை திரித்து அவர்களின் பர்சனலிட்டி உடன் ஒப்பிடுவது தவறு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் செயல்பாடுகளில் மாற்று கருத்து இருந்தாலும், அவர்களின் ஆளுமைகள் ஏதொவொரு வகையில் அனைவரையும் ஈர்க்கக்கூடியது. ஈரோடு இடைத்தேர்தலின் ஆரம்பத்தில் கூட்டணிக்குள் பிரச்சனை இருந்தது. பின்னர் அது சரியாகிவிட்டது. இந்த கூட்டணி நல்ல உள்ளது. எந்த பிரச்சனையும் இல்லை" எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
coimbatore power cut: கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget