மேலும் அறிய

பாரத ரத்னா விருது பெற்ற எல்.கே. அத்வானிக்கு வாழ்த்துகள் - வானதி சீனிவாசன்

'காங்கிரஸ் - காங்கிரஸ் எதிர்' என்றிருந்த பாரதத்தின் அரசியலை, 'பாஜக - பாஜக எதிர்' என்று மாற்றிக் காட்டியது வாஜ்பாய் - அத்வானி இணை”

கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பாரதத்தின் முன்னாள் துணைப் பிரதமர், பாஜக முன்னாள் தேசியத் தலைவர், மத்திய முன்னாள் உள்துறை அமைச்சர் இரும்பு மனிதர் எல்.கே. அத்வானி அவர்களுக்கு நாட்டின் உயரிய 'பாரத ரத்னா' விருது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜக மகளிரணி தேசியத் தலைவர் என்ற முறையில் அவருக்கு எனது பணிவான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் விடுதலைக்குப் பிறகு இந்திய அரசியல் என்பது ஒரு குடும்பத்தின் கரங்களில் சிக்கிக் கொண்டது. அந்த குடும்பத்தின் அதிகாரத்திற்கு பாதிப்பு வந்த போது, நாட்டின் அரசியல் சட்டத்தையே முடக்கி, நெருக்கடி நிலையை அறிவித்தார்கள். 'இரண்டாவது சுதந்திரப் போர்' என்றழைக்கப்படும் 'நெருக்கடி நிலை'யை எதிர்த்து வீர தீரத்துடன்  போராடியவர்களில் மிகவும் முக்கியமானவர் அத்வானி அவர்கள். 'காங்கிரஸ் -  காங்கிரஸ் எதிர்' என்றிருந்த பாரதத்தின் அரசியலை, 'பாஜக - பாஜக எதிர்' என்று மாற்றிக் காட்டியது வாஜ்பாய் - அத்வானி இணை. இரு தலைவர்களும் அரை நூற்றாண்டு காலம் இணைந்து செயல்பட்டு, பாரதத்தின் அரசியல் போக்கையே மாற்றி அமைத்தார்கள். அவர்கள் இட்ட அடித்தளத்தில்தான் பாஜக  தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கிறது. மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைக்க இருக்கிறது.

'இரண்டாவது சுதந்திரப் போர்' என்றழைக்கப்படும் 'நெருக்கடி நிலையை எதிர்த்து வீர தீரத்துடன் போராடியவர்களில் மிகவும் முக்கியமானவர் அத்வானி அவர்கள்.

'பாரத ரத்னா' விருது பெற்ற எங்கள் 'பீஷ்ம பிதாமகர்' அத்வானி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..! வணக்கங்கள்..!!

பிரதமர் மோடி அவர்களுக்கு… pic.twitter.com/hhS6uS0pmN

— Vanathi Srinivasan (@VanathiBJP) February 3, 2024

">

வாஜ்பாய் அவர்களுக்கு அவர் வாழும் காலத்திலேயே 'பாரத ரத்னா' விருது கொடுக்கப்பட்டது. அத்வானி அவர்களும் இப்போது 'பாரத ரத்னா' விருது பெற இருக்கிறார். இந்த இரு தலைவர்களுக்கும் அவரது அரசியல் சீடரான, அவர்கள் தொடங்கி வைத்த லட்சியப் பயணத்தை பல மடங்கு வெற்றிகரமாக எடுத்துச் சென்று கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி 'பாரத ரத்னா' விருது வழங்கி இருக்கிறார். இதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாஜ்பாய், அத்வானி அவர்களைப் பார்த்து வளர்ந்த எங்களுக்கு இதைவிட மகிழ்வான தருணம் இருக்க முடியாது. அத்வானி அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். 'பாரத ரத்னா' விருது பெற்ற எங்கள் 'பீஷ்ம பிதாமகர்' அத்வானி அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை என் வாழ்த்துக்கள். வணக்கங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget