மேலும் அறிய

உதகை : பார்வையாளர்களை கவரும் பழக்கண்காட்சி.. களைகட்டும் கோடை விழா..!

3 டன் பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ராட்சத கழகு, பாண்டா கரடி, தேனீ பூச்சி,ஊட்டி 200 போன்ற பழங்களால் அலங்கரிக்கப்பட்ட சிற்பங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த போதிலும், ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உதகை கோடை விழா நடத்தப்படவில்லை. இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், கோடை விழா நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. 

அதன்படி கடந்த 7 ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி உடன் கோடை விழா துவங்கியது. நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக் கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவை சார்பில் வருகின்ற 31ம் தேதி வரை கோடை விழா நடைபெற உள்ளது. கோடை விழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டு இரசித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.


உதகை : பார்வையாளர்களை கவரும் பழக்கண்காட்சி.. களைகட்டும் கோடை விழா..!

கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி கடந்த 21-ஆம் தேதி துவங்கியது. உதகை தாவரவியல் பூங்காவில் 124 வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார். மலர் கண்காட்சியில் 275 மலர் வகைகளை சேர்ந்த 5.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மலர்கள் இடம் பெற்றுள்ளன. 24 ம் தேதியுடன் மலர் கண்காட்சி முடிவடைய இருந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிப்பு காரணமாக உதகை மலர் கண்காட்சியை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த மலர் கண்காட்சிடை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு இரசித்தனர். 


உதகை : பார்வையாளர்களை கவரும் பழக்கண்காட்சி.. களைகட்டும் கோடை விழா..!

இந்நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பிரசத்தி பெற்ற 62 -வது பழக் கண்காட்சி இன்று துவங்கியது. பூங்கா முழுவதும் 3 டன் பழங்களை  கொண்டு உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ராட்சத கழகு, பாண்டா கரடி, தேனீ பூச்சி,ஊட்டி 200  போன்ற பழங்களால் அழங்கரிக்கப்பட்ட சிற்பங்கள்  சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. பூங்கா முழுவதும் 3 லட்சத்து 6 ஆயிரம் மலர் செடிகளில் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. மேலும் பால்சம், லில்லியம், மேரிகோல்டு, டேலியா,பெட்டுனியா உள்ளிட்ட மலர்கள் பூத்து  குலுங்குகிறது.


உதகை : பார்வையாளர்களை கவரும் பழக்கண்காட்சி.. களைகட்டும் கோடை விழா..!

இது தவிர 20-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பழங்களில் மயில், சிங்கம், புலி, மீன், தாஜ்மகால், அணை  போன்ற அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த பழக் கண்காட்சி இன்று துவங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் களைகட்டி வரும் நிலையில் மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Embed widget